பிரதமருக்கு இன்று 75.

நவம்பர் 18, 1945 இல், டி.ஏ.ராஜபக்ச  முன்னாள் துணை சபாநாயகர் ,தண்டினா சமரசிங்க ஆகியோருக்குப் பிறந்த பெர்சி மஹிந்த ராஜபக்ஷ எட்டு உடன்பிறப்புகளின் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை  .

அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, திரு. ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள பெலியாட்டா வாக்காளர்களுக்கான  சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக  நியமனமட செய்யப்பட்டார். 1970 ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இளைய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினையும் பெற்றார்.

1994 ல் அமைக்கப்பட்ட மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தொழிலாளர் அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார் மற்றும் 1997 இல் மீன்வள மற்றும் நீர்வள அமைச்சராக இருந்தார்.

தொழிலாளர் அமைச்சராக இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஒரு தொழிலாளர் சாசனத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.

2004 ல் எதிர்க்கட்சித் தலைவரான அவர் 2005 நவம்பர் 17 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியானார்..

30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு  வந்தமை இவருடைய காலப்பகுதியில்தான்.

மீண்டும் 2010 ல், இந்த நாட்டின் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் நிர்வாகத் தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.

பின்னர், 2019 ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 05 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ நான்காவது முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..