ஏனையசெய்திகள்

சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக்கொள்ள விரும்பம் – அமைச்சர் அலி சப்ரி

சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக்கொள்ள விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார். சீனாவின் இராணுவக் கப்பலின்...

உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆசிய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை கலந்துரையாடல்களை நடத்தி உடன்படிக்கை மேற்கொள்ள முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதாக உத்தரவாதம் வழங்கினால் சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்- லக்ஷ்மன்

குறுகிய காலத்திற்குள் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல தயாராக இருந்தால், சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர்...

ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தீர்ப்பின் மூலமே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெருந்தோட்ட நிறுவனங்கள்...

இலஞ்ச ஊழல் வழக்கு: ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல்...

ஜனாதிபதி தெரிவின்போது உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ

நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தபட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேயஸ்ரீ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் கருத்து...

அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரதன்மை ஏற்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

பொதுமக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெலவத்தை அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விடயம்...

வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரை!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த...

9 வருடங்களின் பின்னர் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை...

123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டம் இன்று 123ஆவது நாளாக நீடிக்கிறது போதிலும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைவான போராட்டக்காரகளே அங்கு...

மனித உரிமைகளை மதித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும்...

சுற்றுலா விசாக்களில் வேலைத் தேடி செல்லும் இலங்கையர்கள் – நாடுகடத்தும் மலேசியா!

சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயல் படை கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக,...

நாட்டின் நடைமுறையில் உள்ள சட்டங்கள் பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் – ஒரே நாடு ஒரே...

தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி...

கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் சர்வகட்சியில் இணைவது குறித்து சிந்திப்போம் – விக்னேஷ்வரன்

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து அவதானம் செலுத்தப்படும்...

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: கொடுக்க மறுத்து நீதிமன்றம் உத்தரவு

கொழும்பில் நாளை (9) நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தின் போது...

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை- சுனில் ஹந்துன்னெத்தி

சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி. ஒருபோதும் பங்குதாரியாக இருக்காது என்று அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு அரசியல் கட்சிகளுடன்...

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலருக்கு அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. எரிபொருளை மீட்டமை தொடர்பில் பிரதேச செயலருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை கண்டித்து குறித்த கவனயீர்ப்ப்பு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...

சீன கப்பல் விவகாரம்: பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை என மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் பலவீனமான இராஜதந்திர அணுகுமுறை காரணமாக இலங்கை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அனுமதிப்பதற்கு முன்னர் அதிகாரிகள் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்திருக்க வேண்டும்...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்

எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கொண்டுள்ளார் . மாகாண சபைகளின் உதவியுடன் தேசிய...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய (08) நாணய மாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357.19 ரூபாயாகவும் விற்பனை விலை 368.51 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.