ஊர்ச் செய்திகள்

மடு பக்தர்கள் மத்தியில் சுகாதாரம் தகுந்த முறையில் பேணப்பட வேண்டும்

மன்னார் மாவட்டத்தில் மருத மடு அன்னையின் வருடாந்த ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்கள் மத்தியில் சுகாதாரம் தகுந்த முறையில் பேணப்பட வேண்டும் என மடுவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்...

அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூகச் சீரழிவைக் குறைக்கலாம்

மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை...

கராத்தே சம்பியன்சிப் போட்டியில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை

கிழக்கு மாகாண கராத்தே போட்டியில், IMA சங்கம் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மொத்தமாக 40 பதக்கங்களை பெற்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இப்...

காத்தான்குடி பிரதேச செயலக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேச தினக் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் (26) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேச அபிவிருத்தி மற்றும் தற்போது இடம்பெறும் வேலைத்திட்டங்கள்...

விவசாயத்துறையில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னேற்றமடைந்து வருகின்றது – சிவ.சந்திரகாந்தன்

மட்டக்களப்பு மாவட்டம் விவசாய துறையில் பாரிய முன்னேற்றமடைந்து வருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு...

அரசாங்கத்தின் நலன்புரித் உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு

அரசாங்கத்தின் நலன்புரித் உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தொவித்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்து பிரதேச செயலகம் கோறளைப்பற்று மத்தி முன் பிறைந்துறைச்சேனை 204 ஏ பிரிவு சமூர்த்தி...

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்ட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன்,...

கல்முனையில் மறைந்த இலக்கிய ஆளுமைகள் எனும் நூல் வெளியீடு

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த கோவிலூர் செல்வராஜன் எழுதிய " கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்" எனும் நூல் வெளியீட்டு விழா கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முத்துவான் அன்சார் வயது (54) என்ற குடும்பஸ்த்தரே...

சமூர்த்தி பயனாளின் பெயர் நீக்கப்பட்டமை பெரும் அநீதி – இம்ரான் எம்.பி

நாடெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான சமூர்த்தி பயனாளிகள் திட்டமிட்ட முறையில் சில அதிகார தரப்பினரால் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான்...

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற திருமணம்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முற்று முழுவதுமாக விழிப்புலனற்ற இருவருக்கு திருமணத்தினை நடாத்தி சமூக மேம்பாட்டிற்கான முன்னுதாரன செயற்பாடொன்றினை இச்சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். ஆரையம்பதியைச் சேர்ந்த பொன்னம்பலம்...

தேங்காய் பறித்து தருவதாக கூறி துஷ்பிரயோகத்திற்கு முயற்சி

வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்று சேட்டை செய்த முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

“துலங்கும் வர்ணங்கள்” கண்காட்சி நிகழ்வு

சாவகச்சேரி ரி.பி. ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக்கூடத்தின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழாவும்-ஆரம்ப பிரிவு மாணவர்களின் "துலங்கும் வர்ணங்கள்" கண்காட்சி நிகழ்வும் 24/06 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஹன்ற் ஓவியகூடத்தில் இடம்பெற்றிருந்தன....

வாகனம் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் என்ற 26 வயதுடைய இளைஞர்...

மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினர்கள் தெரிவு

மன்னார் பிரஜைகள் குழுவின் பொதுக்கூட்டம் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் சனிக்கிழமை (24) தலைமன்னார் கலையருவி மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2018-2023 ஆம் ஆண்டுக்கான மன்னார் பிரஜைகள்...

நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலய தேரோட்டம்

கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப...

மட்டக்களப்பில் மாணிக்க வாசகர் குருபூசை நிகழ்வும் ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்

'தமிழ் போற்றி சைவம் வளர்ப்போம்' எனும் தொணிப் பொருளில் மாணிக்க வாசகர் குருபூசை நிகழ்வும் ஆன்மீக எழுச்சி ஊர்வலமும்,மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக கலாசார போட்டிகள் மற்றும் சிவ சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று...

பொலிஸ் நிலையத்திற்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும்

குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும்...

எச்என்பி(HNB) ஏற்பாட்டில் 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகள்

( வி.ரி. சகாதேவராஜா) ஹற்றன் நாசனல் வங்கியின்(HNB) சமூக மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேசத்தில் 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. காரைதீவு ஹற்றன் நாஷனல் வங்கியின் முகாமையாளர் கே.ஜெயபாலன் தலைமையில்...

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 93வது வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியின் 93வது வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது உத்தியோகபூர்வ விளையாட்டுக் கொடியினை இல்ல விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் எஸ்.எச்.பிர்தௌஸ்...