ஊர்ச் செய்திகள்

கொக்கட்டிச்சோலை விடுதிக்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி வீடுகள் சேதம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் உள்ள காளிகாபுரம் வீட்டுத்திட்ட பகுதிக்குள் காட்டு யானை புகுந்து வீடுகள், பயிர்களை சேதமாக்கிய சம்பவம் நேற்று(08) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிக்குள் நேற்று இரவு உள்நுழைந்த காட்டு...

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

(சுமன்) மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் (முருகன்) ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக மகாயாக பெரும் சாந்தி விழா எதிர்வரும் 06.02.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இலங்கைத் திருநாட்டிலே...

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

(திருமலை தட்சாயினி ஞானசங்கரன்) திருகோணமலை காப்போம் அமைப்பினரால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசத்திற்குட்பட்ட அன்புவழிபுரம் , வரோதய நகர் கிராமங்களைச் சேர்ந்த நெருக்கடியான பொருளாதார சூழலிலும் திறமையாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்யும்...

வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 112வது பாடசாலை தின நிகழ்வு

(குகதர்சன்) கல்குடா கல்வி வயதுக்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 112வது பாடசாலை தின நிகழ்வு நேற்று வித்தியாலயத்தில் விபுலானந்தா ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது அதிபர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பாரம்பரிய தைப் பொங்கல் விழா கலாச்சார

(க.ருத்திரன்) 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தொணிப் பொருளில்  புதன்கிழமை(19) கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா இன்று கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. உதவி...

காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம்

காரைதீவு ஸ்ரீ நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேகம் நேற்று சங்காபிசேககுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில், ஆலயகுரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் நடைபெற்றபோது.. (படங்கள் : காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)  

மாணிக்கமடுவில் தைப் பொங்கல் விழா

இறக்காமத்திலுள்ள மாணிக்கமடு தமிழ்க்கிராமத்தில் தைப் பொங்கல் பண்டிகைவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பிரபல சமுகசேவையாளர் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறிலில் பிரதமஅதிதியாக்கலந்துகொண்டு மாணிக்கமடு மக்களுடன் இணைந்து தைப்பொங்கல் விழாவை கொண்டாடிய போது.... காரைதீவு நிருபர் சகா

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் உலர் உணவுப் பொதி

மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட கல்முனை கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்ட பிரதேச பாடசாலையான கமு/கமு/ துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை நகர லயன்ஸ் கழகத் தலைவரான தொழிலதிபர்...

காரைதீவுப் பிரதேசத்தில் நாட்டுக்கோழி வழங்கி வாழ்வாதாரம் ஊக்குவிப்பு!

காரைதீவுப் பிரதேசத்தில் வசதிகுறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரவசதியை மேம்படுத்தும்பொருட்டு நாட்டுக்கோழிக்குஞ்சு வழங்கி அதனை வளர்ப்பதற்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் அவற்றைவழங்கிவைப்பதையும் மனிதஅபிவிருத்திதாபனபணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பிரமுகர்கள் அருகில் நிற்பதையும் காணலாம். (படங்கள் : வி.ரி.சகாதேவராஜா)

திருகோணமலையில் சக்திப்பொங்கல் சிறப்பாக முன்னெடுப்பு!

(ஆர். சமிரா ) சுவிற்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தினால் திருகோணமலையில் சக்திப்பொங்கல் நிகழ்வு நேற்றையதினம் மாலை 4.00 மணிக்கு (12.01.2022) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வு...

தேசிய ரீதியில் கொழும்பில் இடம்பெற்ற கபடி சம்பியன்சிப் போட்டியில் வெற்றி

( றம்ஸீன் முஹம்மட் ) தேசிய ரீதியில் கொழும்பில் இடம்பெற்ற கபடி சம்பியன்சிப் போட்டியில் வெற்றியீட்டி அம்பாறை மாவட்டத்திற்கும் நிந்தவுர் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த நிந்தவுர் மதீனா விளையாட்டுக்கழக வீர்ர்களை முன்னாள் அமைச்சரும் ,...

அனர்த்தங்களால் பாதிப்படைந்தவர்களுக்கு கொடுப்பனவு

( தாரிக் ஹஸன்) கடந்த வருடம் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் போன்ற பல அனர்த்தங்களால் வீடு, வீட்டு உபகரணப்பொருட்கள் பாதிப்படைந்த காரைதீவு-01, காரைதீவு-06, காரைதீவு-11 மற்றும் மாவடிப்பள்ளி கிழக்கு ஆகிய...

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் உள்ளக வீதி திறந்து வைப்பு !

(நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை முஸ்லிம் முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் காணப்பட்ட உள்ளக வீதிகள் யாவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காஸிமின் முயற்சியில் காபட் வீதிகளாக புனரமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை...

திருமலையில் வருடாந்த ஒன்று கூடலும் புதிய நிர்வாகத் தெரிவும்

(அ.அச்சுதன்) அகில இலங்கை உள்ளூராட்சி நிறுவனங்கள் நடுக்காட்டு உத்தியோகத்தர் சங்கம் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் புதிய நிர்வாகத் தெரிவு ஞாயிற்றுக்கிழமை (09) இதன் செயலாளர் கே.டி.ஹறல்ட் வின்சென்ட் தலைமையில் திருக்கோணமலை நகராட்சி மன்ற நகர...

சமுதாய வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு அளப்பரியது; சுவிஸ் சமூக செயற்பாட்டாளர் துரைநாயகம் 

(வி.ரி.சகாதேவராஜா) ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம் இன்று உலகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. அதுபோல ஒரு சமுதாய வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு அளப்பரியது.எனவே ஊடகவியலாளர்களை பெரிதும் மதிக்கின்றேன். இவ்வாறு சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும், பிரபல...

தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டியில் நிந்தவூர் அல்-மதினா விளையாட்டுக்கழக கபடி அணியினர் வரலாற்றுச் சாதனை

(நூருல் ஹுதா உமர்) இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையிலான தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டி இம்மாதம் 08, 09 மற்றும் 10 ந் திகதிகளில் கொழும்பு...

புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு Blooming Buds (வுளுமிங் பட்ஸ்) முன்பள்ளி நிலையத்தில் இவ்வருடம் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (10.01.2022ம் திகதி) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வு கொவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்...

அம்பாறை மாவட்ட பகுதியில் அன்னப் பறவைகள் நடமாட்டம் அதிகரிப்பு

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்ட பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக அன்னப் பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இப்பறவைகள் மருதமுனை, நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு ,கல்முனை,சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை...

சாய்ந்தமருதில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை முன்னெடுப்பதற்கான அமைப்பு உதயம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை தன்னார்வத்துடன் முன்னெடுப்பதற்காக அமைப்பொன்று உருவாக்க்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை எனும் பெயரிலான இந்த அமைப்பின் அங்குராப்பணக் கூட்டம் சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் நிலைய...

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

(இ.சுதாகரன்) 30 வருட கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச மக்களின் நிறைவேறாத நீண்டநாள் பிரச்சினைக்கு மட்டக்களப்பு மாவட்ட இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட...