பிரதானசெய்திகள்

காலிமுகத்திடல் தாக்குதல் சாடுகின்றது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு.

வெள்ளிக்கிழமை (ஜூலை 22) காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டத் தளத்தில் நடந்த இராணுவத் தாக்குதல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு "சிலிர்க்க வைக்கும் செய்தியை" அனுப்புவதாக மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் (OHCHR) ஐ.நா அலுவலகம்...

கோதா கோ கம கிளைகளை அகற்றுமாறு பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 'கோதா கோ கம' கிளைகளை அகற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பில் காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் செயற்பாட்டாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட 'கோதா கோ கிராமம்' போராட்ட தளத்துடன்...

எரிபொருள் வரிசை 19வது மரணம் திருமலையில் பதிவு.

(ரவ்பீக் பாயிஸ்) கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ.ஓ.சீ எரிபொருள் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த 58 வயதுடைய நபரொருவர் மயக்கமுற்ற நிலையில் இன்று (22) உயிரிழந்துள்ளதாக தெரிய...

போராட்டத்திற்கு ஹிட்லர் மற்றும் பொல்போட்டின் தீர்வுகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை

இப்போராட்டத்திற்கு ஹிட்லர் மற்றும் பொல்போட்டின் தீர்வுகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை எனவும், போராட்டக்காரர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதலை கண்டிப்பதாகவும்   கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

புதிய இடைக்கால அமைச்சரவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் – பிரதமர் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த கடற்றொழில் வளங்கள் அமைச்சர்...

ரணில் விக்ரமசிங்க பதவி பிரமானம்

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகஇ ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10.15 மணியளவில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்இ பதவி பிரமாணம் இடம்பெற்றது. இதன்Nபுhது...

Supeedsam epaper 19.07.2022

  supeedsam_Tuesday_19_07_2022

அரச உத்தியோகத்தர்களுக்கு மன அசௌகரியத்தினை ஏற்படுத்தியிருக்கிறது – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்

தவறான புரிதலுடன், அலுவலக வாகனங்களில் இருந்த கொள்கலன்களை தூக்கி எறிந்தமையானது உண்மையாகவே மாவட்டத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஒரு மன அசௌகரியத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு...

சிறுபான்மை மக்கள் வழங்கியிருக்கும் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள்

வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான, உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கே பாராளுமன்றத்தில் வாக்களிக்குமாறு கேட்கிறோம். வடக்கு கிழக்கு மக்கள் தங்களுக்கு வழங்கியிருக்கும் மக்கள் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு...

கலிங்க குல பொதுக்கூட்டம்

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய கலிங்க குல திருப்பணிச்சபையினரின் வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 17.07.2022ம் திகதி ஞயிற்றுக்கிழமை மு. ப 09மணிக்கு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள கலிங்க குல திருப்பணி...

ரணிலும் அவுட். இந்தியா

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தால், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவியேற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கத்தின் பலமான குழுவிற்கு இந்தியா அறிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம்...

14 மாவட்டங்களில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 14 மாவட்டங்களில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக 1990 சுவாசரியா ஆம்புலன்ஸ் சேவை அறிவித்தது. ஞாயிறு மாலை 4:00 மணி முதல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,...

சுபீட்சம் EPaper 12.07.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 12.07.2022 supeedsam_Tuesday_12_07_2022

ஊடகவியலாளர் சக்திவேல் எழுதிய களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன்; பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா

ஊடகவியலாளர் சக்திவேல எழுதிய களுமுந்தன்வெளி  முத்துமாரியம்மன்; பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா. மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வ.சக்திவேல் எழுதிய பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா வியாழக்கிழமை (07.07.2022) களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன் முன்றில் இடம்பெற்றது. குறித்த இறுவெட்டிற்கு கிழக்கிலங்கையின் புகழ்பூத்த நிஸ்கமானந்தராஜா டனூஷ்ஷியன் இசையமைத்துள்ளதுடன், இலங்கை வானொலி தேசிய கலைஞரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலைச்சுடர் வீ.பத்மசிறி  மற்றும் புகழ்பூத்த பாடகி செல்வி சுலக்ஷனி புவனேந்திரராசா ஆகியோர் இணைந்து பாமாலையினை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் விநாயகர் கலைக்கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான மு.சவுந்தரராசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக களுமுந்தன்வெளி மாணிக்கப் பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் பிரதம குரு சிவ ஸ்ரீ த.கு.திருச்செல்வம் குருக்கள் அவர்களும், பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புல தொழில்நுட்பத்துறையின் தலைவர் கலாநிதி.சு.சிவரெத்தினம் அவர்களும், சிறப்பு அதிதிகளாக களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தின் அதிபர் நா.ராமேஸ்வரன், களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் தலைவர் ஞா.யோகநாதன், செட்டிபாளையம்ம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் தலைவர் யோகராஜா,முன்னாள் அதிபர் வீ.கோபாலபிள்ளை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். விநாயகர் கலைக்கழகத்தின் உபதலைவரும் ஆசிரியருமான ந.தரணிதரனின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவை  சங்கத்தின் மட்டக்களப்பிற்கான தலைவர் த.வசந்தராஜா அவர்களினால் இறுவெட்டு வெளியீட்டு வைத்தார். இறுவெட்டின் முதற் பிரதியை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஆலோசகருமான தேசபந்து எம்.செல்வராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார். இறுவெட்டின் கவிஞர் நயவுரையினை தொடர்ந்து கவிஞர் ம.ஜீவரெட்ணம் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தியதுடன், ஏற்புரையை பாடலாசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வ.சக்திவேல் அவர்களும், நன்றியுரையை விநாயகர் கலைக்கழகத்தின் செயலாளர் யோ. கிவேதன் அவர்களும் நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சி தொகுப்பை கலைக் கழகத்தின் ஆலோசகர் தெ.சிவபாதம் மேற்கொண்டார். இதன்போது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வடிவேல் சக்திவேல் அவர்களுக்கு கலைக்கழகத்தினரால், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

“கோதா-நீ-போப்பா” போராட்டம்! – எதிரணி, காலிமுக போராட்டக்குழுக்கள் இணக்கப்பாடு-மனோ கணேசன்

9ம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி  நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள்,காலிமுக...

மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில் தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2022

இலங்கையின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20,21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர்  விளையாட்டு...

சுபீட்சம் EPaper 05.07.2022

  சுபீட்சம் இன்றைய பத்திரிக்கை 05.07.2022 supeedsam_Tuesday_05_07_2022  

மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி IOC ஊடாக எரிபொருள் விநியோகம்!

முழு இலங்கையிலும் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் நகரில் உள்ள IOC ஊடாக பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இன்று எரிபொருள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தேசத்து கோயில்களில் ஒன்றான பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை(01) அதிகாலை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக கிராம ரீதியான திருவிழாக்கள் நடைபெற்று,...

கோட்டபாய பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும்; இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகினால் நாடு சுபீட்சமாகும் என்பதை யாரும் மறந்திவிட வேண்டாம் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் ...