reporter312

1668 POSTS 0 COMMENTS

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 4ஆவது கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

(வி.சுகிர்தகுமார்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட 4ஆவது கொரோனா பராமரிப்பு சிகிச்சை நிலையம்  திறந்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான துறைசார் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்.

(நூருள் ஹுதா உமர்) அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான துறைசார் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (21)அக்கரைப்பற்று மாநகர முதல்வர்...

நிந்தவூர் வயலில் சடலமாக ஒருவர் மீட்பு !

(நூருள் ஹுதா உமர்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் இறந்த உடலொன்று காணப்படுகிறது. நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் சடலமாக காணப்படுபவர் இறைச்சி...

கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்கள் பா.உ கோ.கருணாகரத்துடன் சந்திப்பு.

கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், கிழக்கு மாகாணசபை...

கொரோனா மையவாடியில் தற்காலிக கொட்டகைகள் பாவனைக்கு.

கொரோனாவினால் மரணிக்கின்ற  பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஜ்மா நகர் மையவாடிக்கு வரும் உறவினர்கள் மற்றும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பாதுகாப்புத்தரப்பினர், சுகாதாரத்துறையினரின் நன்மைகருதி அமைக்கப்பட்ட இரு தற்காலிக கொட்டகைகள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. கோறளைப்பற்று மேற்கு...

நிவாரணப்பணிக்காக திரட்டப்பட்ட 8 இலட்சத்திற்கும் அதிகமான நிதி.

(வி.சுகிர்தகுமார்) புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளுர் உறவுகள் அரச உத்தியோகத்தர்கள்; மூலம் நிவாரணப்பணிக்காக திரட்டப்பட்ட 8 இலட்சத்திற்கும் அதிகமான நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 500 உலர் உணவுப் பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச சமூக...

விவசாயத் துறையில் புதிய புரட்சி! சம்மாந்துறை கண்டுபிடிப்பு .

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்) மனித சமூகத்தின் இருப்பிற்கு உணவு இன்றியமையாததாகும் அதற்கு விவசாய உற்பத்திகளே பெரும் பங்கினை வழங்கி வருகின்றன. வரலாற்றில் வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு காலநிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச்...

பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டும் பெற்றோர் சுகாதார நலனிலும் அக்கறை கொள்ளுங்கள். (சுகாதார வைத்திய அதிகாரி)

(நூருல் ஹுதா உமர்) கொவிட்-19 கொரோணா வைரஸினை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் சில தினங்களாக அமுல்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள் நாட்டின் சட்ட திட்டங்களை நாட்டின் நற்பிரஜை என்ற வகையில்...

ஊடகவியலாளர்களுக்கு உலருணவு வழங்கிய முஷாரப் எம்.பியின் அனர்த்த நிவாரண நிதியம்.

(நூருள் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸாரப் முதுநபின் அவர்களின் தலைமையிலான அனர்த்த நிவாரண நிதியத்தினால் உலருணவுகள் நேற்றிரவு கல்முனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் வைத்து...

கல்முனை கிளு கிளுப்பு அமைப்பின் ஏற்பாட்டில் நிவாரணப்பணி.

(சர்ஜுன் லாபீர், எம்.என்.எம் அப்ராஸ்) நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த இவசதி குறைந்த சுமார் 160 குடும்பங்களுக்கு 4000 ரூபாய்...

தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் அரசு  (இந்திரகுமார் பிரசன்னா)

மாகாணசபையின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்தும் விடயங்களை மத்திய அரசாங்கம் துரிதமாக செயற்படுத்துகின்றது. அதிலும் மாகாணசபைக்குரிய பாடசாலைகள் வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தல் என்ற பெயரில் மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் செயற்பாடுகளையே...

பசளையை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) விவசாயிகளுக்கான பசளை வினியோகத்தை உடனடியாக நிறுத்தாமல் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாதிக்கப்பட்ட கிண்ணியா பீங்கான் உடைந்தாறு விவசாயிகள் கவனயீர்ப்புச் செய்தனர். இரசாயன பசளை பயன்பாட்டுக்கு பழக்கப்பட்ட...

எரிபொருட்கள் மீதான விலை அதிகரிப்பானது வாகனம் வைத்திருப்பவர்களைவிட வாகனம் இல்லாதவர்கள் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

எரிபொருட்கள் மீதான விலை அதிகரிப்பானது வாகனம் வைத்திருப்பவர்களைவிட வாகனம் இல்லாதவர்கள் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருட்கள் மீதான...

மக்கள் மனமறிந்து சேவை செய்யும் பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ்

கொவிட் - 19 காரணமாக அமுலிலுள்ள நடமாட்டத் தடை காரணமாக அன்றாடம் நாட்கூலி வேலைசெய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கலாய்க்கின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை...

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கோவிட் சிகிச்சை உபகரணங்கள் கையளிப்பு.

(கதிரவன்) திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது. இன்று 2021.06.18 மாலை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில்...

கல்முனைக்குடி பிரதான வீதியில் குப்பை வீசுவோர் மீது கடும் நடவடிக்கைக்கு முஸ்தீவு.

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைக்குடி பிரதான வீதியின் சில முக்கிய இடங்களில் குப்பை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்ற நபர்களைக் கண்டறிந்துஇ நடவடிக்கை...

கிழக்கு மாகாணத்தில் இயற்கை உர உற்பத்தியை விரிவுபடுத்த ஆலோசனை.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டின் விவசாயத்தை முழுமையாக ஒழுங்கமைக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எடுத்த முடிவு தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் இயற்கை உரங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை ஆய்வு செய்வதற்காக கிழக்கு மாகாண...

உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டில் தற்போது நிலவும் கொவிட்19 அசாதாரண சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அண்ணல்நகர் பிரிவில் உள்ள 90 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்று...

முறையான அனுமதிப் பத்திரமற்று வீதிகளில் உலாவுவோர் மீது பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை.

(எம்.ஏ.றமீஸ்) கொவிட் தொற்றின் ஆபத்தான நிலைமையினை நோக்கி கல்முனைப் பிராந்தியம் சென்று கொண்டிருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தினுள் இப்பிராந்தியத்தில் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோரு இரு மரணங்களும் பதிவாகியுள்ளது. இக்கால கட்டத்தில்...

வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துள்ள குணவர்த்தன மட்டக்களப்பிற்கு விஜயம்!

(ரக்ஸனா)வர்த்தக வானிபத்துறை அமைச்சர் பந்துள்ள குணவர்த்தன புதன்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தி யோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள 'ரஜவாச' பல்பொருள்...