Rep102

85 POSTS 0 COMMENTS

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

கொழும்பு - நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறை ஒன்றிலிருந்தே இந்த...

கொரோனா தொற்றுக்குள்ளான கைவிடப்பட்ட குழந்தைக்கு தாதியர்கள் ஒன்றிணைந்து காது குத்தும் விழா

பிறந்து ஆறு  நாட்களில் கை விடப்பட்டதும் கொரோனா தொற்றுக்குள்ளானதுமான குழந்தை ஒன்றுக்கு வைத்தியசாலை தாதியர்கள் காதுகுத்து விழாவை நடத்தியுள்ளனர். திருகோணமலை சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்டுவந்த குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கந்தளாய் கொரோனா...

ஓட்டமாவடியில் ஆற்றில் வீசப்படும் கழிவுகளால் மீன்பிடித்தொழில் பாதிப்பு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தமது  தொழிலை மேற்கொள்ள முடியாத வகையில்  பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாக அப்பகுதி  மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மீராவோடை தொடக்கம் தியாவட்டவான் பகுதிவரை ஆற்றின்...

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை உடன் அமுல் படுத்துக : ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்.!

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் கடந்த 2 வருடங்களாக அமுல் படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த இடமாற்றத்தை உடன் அமுல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென...

பழிவாங்கும் நோக்கில் ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய பெண் கைது

திருகோணமலை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் ஜெயிலரை பழிவாங்கும் நோக்கில் ஹெரோயின் போதைப்பொருளை நபர் ஒருவருக்கு வழங்கிய  பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலை மட்கோ...

முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகாவிற்கு கொவிட் தொற்று

பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவின்படி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அவரது குழந்தைகள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்...

இதனாலேயே அவசர காலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது : அங்கஜன் இராமநாதன்

தற்போதுள்ள இக்கட்டான நிலையில் நுகர்வோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நாட்டில் கொரோனா வைரஸ்...

இலங்கையின் அவசரகால விதிமுறைகள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவை கண்காணிக்கிறது : மிச்செல் பெச்லெட்

இலங்கை அரசினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கண்காணித்து வருவதாக அப்பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48...

தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜயந்த கெட்டகொடவின் பெயர் பரிந்துரைப்பு

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு  ஜயந்த கெடகொடவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட ஆவணம்  தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தினால் இன்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் குறித்த ஆவணம்...

மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஷாஹுல் ஹமீட் முஜாஹிர் பதவி நீக்கம்

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் முஜாஹிர் தவிசாளர் பதவியிலிருந்தும், சபை அங்கத்தவர் பதவியிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தவிசாளர் ஊழல்  மற்றும் அதிகார துஷ்பிரயோகம் புரிந்துள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக...

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம் தடுப்பூசி வழங்கல் திட்டம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாத முற்பகுதி தொடக்கம் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தொடங்கப்படுமென...

மலையக மக்களுக்கு பாதகமான பல விடயங்கள் நல்லாட்சிக் காலத்தில் செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின்ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர்...

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தை கையளித்தார்

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் இன்று கையளித்துள்ளார். அஜித் நிவாட் கப்ரால்  பதவியை இராஜினாமா செய்வதால் ஏற்படும் வெற்றிடத்திற்கு  ஜயந்த...

கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறைந்துள்ளது : வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறிபிட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது நாட்டில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தொற்றாளர்களினதும்...

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை நாட்டில் தற்போது குறைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். நேற்று தம்புத்தேகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை...

கப்ராலின் வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க தீர்மானம்

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் உருவாகும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...

எந்தவொரு நாடும் அடையாத வீழ்ச்சியை இலங்கை அடையும் நிலைக்கு உள்ளாகும் : எதிர்கட்சி தலைவர்

கொவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக உலகின் எந்தவொரு நாடும் அடையாத வீழ்ச்சியை நமது நாடு அடையும்  நிலைக்கு உள்ளாகி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர்...

முல்லைதீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் நில அபகரிப்பு முயற்சி?

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை பெரும்பாண்மை இனத்தவர்கள் சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த நில அபகரிப்பு முயற்சியானது  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன்...

ஒற்றுமை மற்றும் சக வாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஒற்றுமை மற்றும் சக வாழ்விலேயே ஒரு தேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜி 20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜகக்ஷ...

துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்...