Rep102

89 POSTS 0 COMMENTS

நாட்டை திறப்பது தொடர்பில் இன்று தீர்மானம்!

எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டை திறப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ள கொவிட்  கட்டுப்பாட்டு தேசிய செயலணியின்...

பல ஆண்டுகள் சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை

பல வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாது சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற அரசியல்...

முழுமையான தீர்வை எட்டும்வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் : ஜோசப் ஸ்டாலின்.

கல்வி அமைச்சுக்கும்  அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் நேற்று  நடைபெற்ற பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தை  தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து...

மின் பாவனையாளர்கள் கட்டணங்களை செலுத்தாமையால் மின்சாரசபை பாரிய நெருக்கடியில்

இலங்கை மின்சார சபைக்கு மின்சார விநியோக கட்டணமாக ரூபா 44 மில்லியன் இன்னமும் கிடைக்கப்பெறாதுள்ளதனால் மின்சக்தி விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர்...

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டை வைத்தவர் சிக்கினார்

கொழும்பு, நாரஹேன்பிடவில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட கைக்குண்டை அங்கு வைத்தவர் பொலிஸாரின் விசாரணையில் சிக்கியுள்ளார். அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களில்...

கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இருவரை முழந்தாளிட்டு இருக்கச் செய்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை தனது கைத் துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி...

அமைச்சர் மொஹான் பிரியதர்சன டி சில்வா ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன டி சில்வா ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஒலுவில் துறைமுகத்திலுள்ள குறைபாடுகளைக் நேரடியாகப் பார்வையிடுவதற்காக இன்று அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டார். குறிப்பாக, ஒலுவில்...

தமிழ் கைதிகள் இருவரை மிரட்டிய அமைச்சரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன் : வி.ஜனகன்

தமிழ் கைதிகள் இருவரை மிரட்டிய இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி வி ஜனகன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்...

மட்டக்களப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான பால்மா பக்கட்டுகள் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடியில் பல சரக்கு கடைகள் இரண்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பால்மா பக்கட்டுக்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் இன்று மீட்கப்பட்டன. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்....

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பினரால் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினரின்  இலவச மின் இணைப்பு வழங்களின் இரண்டாம் கட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ.எம்....

கிண்ணியா கொரோனா மையவாடிக்கு மின்குமிழ்கள் அன்பளிப்பு

பரிந்துரைக்கப்பட்ட கிண்ணியா வட்டமடு மையவாடிக்கு மின்குதிழ்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் நிகாரிடம் குறித்த மின்குமிழ்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த மையவாடிக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக...

கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள்

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளை சுகாதார அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளை பிரதி சுகாதார...

பட்டதாரி பயிலுனர்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களில் நிரந்தர நியமனம்.

பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள  53,000 பட்டதாரிகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் அரச நிறுவனங்களில் நிரந்தரமாக இணைக்கப்படவுள்ளனர். அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். நேற்று  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை...

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்பு

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக  அஜித் நிவாட் கப்ரால் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று  முற்பகல்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  அவருக்குறிய  நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட்...

கொரோனா தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்துப் பொதி அறிமுகம்

கொரோனா தொற்றுநோயை  ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக, வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துப்பொதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர்...

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நான்குபேர் கைது

தலைமன்னார், உருமலை கடற்பகுதியில் 8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கடற்படையினரின் விசேட ரோந்து நடவடிக்கையின்போதே  குறித்த சந்தேகநபர்கள்...

தடுப்பூசிக்கான மாணவர்களின் வயதெல்லை தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானம்.

கோவிட்  தடுப்பூசி செலுத்தப்படவேண்டிய மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று  நடைபெறவுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீளத் திறப்பதை அடிப்படையாக கொண்டே இந்த கலந்துரையாடல் அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, முன்பள்ளி...

அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு பந்தம் பிடிக்கும் அங்கஜனின் கருத்தை முக்கியமாக கருதவேண்டிய அவசியமில்லை!

தற்போதைய அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு பந்தம் பிடிக்கும் அங்கஜனின் கருத்தை முக்கியமான விடயமாக  கருத வேண்டிய அவசியமில்லை  என்று நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...

வாழை தோட்டத்திற்குள் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

வாழை தோட்டத்திற்குள் கஞ்சா செடிகளை பயிரிட்ட நபர் ஒருவரை கொட்டாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைதுச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. கொட்டாவை, ஹொரஹேன பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்....

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் இன்று தீர்மானம்

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில்,  இன்று தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்...