Rep102

453 POSTS 0 COMMENTS

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறக்க எதிர்பார்ப்பு : சுகாதார அமைச்சர்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துவெளியிடும்போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கொவிட் பரவலை கட்டுப்படுத்தும்...

ரூபா 18 மில்லியன் செலவில் நடைபாதை அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம்

நாட்டில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டம் குறித்து ஆராயும் கூட்டம் ​ நடைபெற்றது. குறித்த கூட்டமானது,  மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகர...

முன்பள்ளி மற்றும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட பின்னர் முன்பள்ளி மற்றும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கென விசேட போக்குவரத்து சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று  ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோது போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை குறிப்பிட்டார். இந்த...

O/L பரீட்சை பெறுபேற்று சான்றிதல் எதிர்வரும் திங்கட்கிழமை இணையத்தளத்தில்

அண்மையில் வெளியாகிய 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதல்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். அரசாங்க தகவல்...

ஐக்கிய நாடுகள் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது. கொவிட்19 தொற்றுநோயிலிருந்து  நம்பிக்கையான மீட்பு, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், நிலைத்தன்மையை உருவாக்குதல்  போன்ற விடயங்களை மையமாக கொண்டு அமெரிக்க ஜனாதிபதி...

தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் மட்டக்களப்பில் நடாத்த ஏற்பாடு

தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை மட்டக்களப்பிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திட்டத்திற்கமைவாக இளைஞர் விவகார...

தந்தையை கடுமையாக தாக்கி கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன் தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில்...

ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன் குளம், குசனார் மலை, கித்துள் மற்றும் மயிலவெட்டுவான் ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள்...

யாழ். கொக்குவில் பகுதியில் வியாபாரிகள் மீது அண்டிஜென் பரிசோதனை!

யாழ். கொக்குவில் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தபோது குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு...

பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட நிவாரணம்

பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருப்பதாலும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு...

ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவுக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 21 ஆம் திகதி  நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் கலந்து கொள்ளவதற்காகவே ஜனாதிபதி அமெரிக்காவிற்ற்கு...

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பதவியை ராஜினாமா செய்தார்

பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மஹிந்த சமரசிங்க  அமெரிக்க மற்றும் மெக்ஷிகோவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டம் நடத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படும் : விவசாய அமைச்சர்

விவசாயிகள் நெல்லை விற்காது போராட்டம் நடாத்தினால் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும்...

கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் நோய் எதிர்ப்பு பானம் வழங்கி வைப்பு

கல்முனை  பிரதேசத்தில் கொரோனா வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கிவைப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இன்று இடம்பெற்றது. கல்முனை மனித வள அமைப்பின் ஒத்துழைப்போடு கல்முனை கீரின்...

எனக்கே அலட்சியமான பதிலென்றால் தாக்கப்பட்டவரின் நிலை என்னவாக இருக்கும்? இரா. சாணக்கியன் கேள்வி

அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனின் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கே அலட்சியமான பதில் வழங்கப்படுகிறது எனில் சாதாரண பொதுமக்களின் நிலை என்னவாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஆயித்தியமலையில் 57 சாராயப் போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ்பிரிவில்  சட்டவிரோதமான முறையில்  மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை மதுபானப் ஆயித்தியமலை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் தனது வீட்டில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு...

கிழக்கு மாகாண ஆளுநரால் சுதேச மருத்துவ பணி குழு நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர்‌ அனுராதா யஹம்பத்‌ அவர்களினால் கிழக்கு மாகாணத்தில்‌ ஆயுர்வேத மருத்துவ பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு, சுதேச மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கவும், உள்ளூர்‌ மருந்துகளை வழங்குவதற்கும்‌, நோயிலிருந்து...

சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பின்நிற்காது

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் பின்நிற்காது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று  அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின் ஊடகவியலாளர்கள்...

இணையவழி கற்பித்தலில் ஈடுபடுவோருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

இணையத்தில் நிகழ்நிலைவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எவரேனும்  அச்சுறுத்தல் விடுத்தால் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்த்திடம் நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ்  தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் முறைமையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு...

அமைச்சர் வீட்டிலிருந்தே கைக்குண்டை கொண்டுவந்தேன் : சந்தேகநபர் வாக்குமூலம்

கொழும்பு, நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்தே கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனினும், சந்தேகநபரின் வாக்குமூலம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு குற்றவியல் பிரிவு...