மாந்தீவுக்குள் கைதிகள்? சிறைச்சாலை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாந்தீவில் உள்ள  தொழுநோயாளர் வைத்தியசாலையை, சிறைக் கைதிகளை தங்கவைப்பதற்காக பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.

மாந்தீவு வைத்தியசாலைஅமைந்துள்ள பகுதியைபார்வையிடுவதற்காக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரி.எம்.ஏ.டபிள்யு தென்னக்கோன் சகிதம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் சுகாதாரதிணைக்கள அதிகாரிகளுடன், மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தர் குகராஜா  சகிதம்  வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.