முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திலும் 8ஏ,சீ சித்தி பதிவு

வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் 8ஏ, சீ சித்திகளைப்பெற்றுள்ளான்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்ற சிறிகேசன் துலுக்சன் என்ற மாணவனே குறித்த சித்தியினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையின் கூடிய பெறுபேறாக இப்பெறுபேறு அமைந்துள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது. மேலும் அதே பாடசாலையில் கல்வி கற்ற குமரகுரு டனுஸ்கா என்ற மாணவி 7ஏ,வீ,சீ சித்திகளையும் பெற்றுள்ளார்.