சொன்னாலும் குற்றம். பசீர் காக்காவை கண்டால் சொல்லுங்கோ.வெள்ளிமலை ஐயாவும் பொலிசாரின் விடுவிப்பும் இப்பதான் ஞாபகத்துக்கு வருகிறது.

(புரட்சி)

பசீர் காக்காவை கண்டால் சொல்லுங்கோ

நம்மட  முன்னாள் குட்டி சனாதிபதி அண்மையில்  அவங்கட ஊரில உள்ள ஆஸ்பத்திரியை கொரனா ஆஸ்பத்திரியாக மாற்றியதுக்கு தமிழ் சிங்கள மக்கள்தான் காரணம்.அவங்க திட்டமிட்டே தங்கள் சமுகத்தை பழிவாங்குவதற்காக செய்யப்பட்ட நடவடிக்கை என தனது பாணியில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்பத்திரியை தேர்வு செய்வது அரசமட்டத்தில் நடக்கும் விடயம். அரச உயர் மட்டம் எடுக்கின்ற முடிவுகளுக்கு ஏனப்பா மட்டக்களப்பில் ஒற்றுமையாக இருக்கின்ற இரு சமுகங்களை தங்கள் அரசியல் இலாபத்துக்காக பிளவுபடுத்த முயல்கிறிங்க.அதுசரி தற்போதைய சனாதிபதி பிரதமமந்திரி இராணுவத்தளபதி பசில்ராசபக்ச அனைவரும் தங்களுடைய நண்பர்கள்தானே அவர்களிடம் சொல்லி இதை தடுத்து நிறுத்திஇருக்கலாம்தானே.

ஒருவிசயத்தை பசீர் காக்காவிடம் சொல்லிவையுங்கோ மட்டக்களப்பில் தேர்தல் கேட்கப்போறிங்க உங்கட லிஸ்ட்டிலும் தமிழ் ஆக்களை போட்டு இருக்கிங்க என்று கேள்விப்பட்டோம் உங்கள் வேட்பாளர் இப்படி கதைத்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கவேண்டாம் என்று  பசீர் காக்காவை கண்டால் சொல்லுங்கோ.

வெள்ளிமலை ஐயாவும் பொலிசாரின் விடுவிப்பும் இப்பதான் ஞாபகத்துக்கு வருகிறது.

ஐயாவின் பேட்டியொன்றை நேற்றுபார்த்தவுடன் பழையஞாபகம் ஒன்று வந்தது. சமாதான ஒப்பந்த காலத்தில் பாதைமாறி பட்டிருப்பு பாலத்தால வந்த பொலிஸ்சிரேஸ்ட அதிகாரிகளை கட்றம் பூச்சி மரத்தடியில்வைத்து பொடிகள் வழிமறித்து அவர்களை அன்பாக அழைத்துச்சென்று பெரியபோரதீவு சந்தைக்கு அண்மையில் உள்ள கட்டடத்தில் அமரவைத்து அவர்களுக்கு பாணங்கள் வழங்கி கண்காணிப்புக்குழுவிடம் அவர்களை ஒப்படைத்த ஞாபகமும் வருகிறது. அதுமட்டுமல்ல அன்று சமாதானக்காலம் யார் வந்தாலும்  கண்காணிப்பு குழு முன்னிலையில் விடுதலை செய்யவேண்டும்.

அத்துடன் குறிப்பிட்ட பொலிசார்கள்  விடுதலைப்புலிகளின் உபசாரம் பண்புகள் பற்றி தென்னிலங்கை ஊடகங்களில் சிறப்பாக பேட்டி கொடுத்தமையும் ஞாபகம் வருகிறது.

ஒப்பந்தக்காலத்தில் ஏறாவூரில் வைத்து பிடிபட்ட இரு புலனாய்வுப்போராளிகளை வெள்ளிமலைஐயா உயர் மட்டத்திடம் கதைத்து சனிக்கிழமையன்று 10ஆயிரம் ரூபா பிணையில் வெளியில் வந்ததும் இப்பதான் ஞாபகத்துக்கு வருகிது.