சீதுவையிலுள்ள விசேட இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சீதுவையிலுள்ள விசேட இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (25) அதில் பணியாற்றும் இராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முகாம் இன்று (26) முற்பகல் மூடப்பட்டு, தனிமைப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.