பொத்துவில் ஊறணி கிராம மக்களுக்கு ‘அன்பேசிவம்’ அமைப்பின் உலருணவுப்பொதிகள்.

கொனாராநெருக்கடிக்காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்துக்குள்ளான அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள  பொத்துவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய ஊறணிக் கிராம மக்களுக்கு சுவிஸ் ‘அன்பேசிவம்’ அமைப்பின் ஏற்பாட்டில் 150 உலருணவுப்பொதிகள் நேற்று(24) பொத்துவில் பிரதேச செயலாளர்  ஆர்.திரவியராஜ்  முன்னிலையில் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவனாலய சைவத்தமிழ்ச்சங்கத்தின்  ‘அன்பே சிவம்’ என்ற அமைப்பினர் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் உதவியை அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யாழ்.பல்கலைக்கழகமாணவன் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் வழங்கிவைத்தனர்.

நிகழ்வில்   பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ்    மாவட்ட சமுகசெயற்பாட்டாளர்  கே.ஜெயசிறில் அமைப்பின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ‘அன்பேசிவம்’ அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஆசிரியர் என்.ரவிந்திரன்   கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தலைவர்  எஸ்.மோகன் ,  காரைதீவு சமுகசெயற்பாட்டாளர்களான பவானந்தன், புவனேந்திரன் ரஞ்சன்  மற்றும்  கிராமசேவையாளர்  திட்டஉத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.

ஏலவே கல்விமற்றும் சமுக செயற்பாட்டாளர் இணைப்பாளர் சோ வினோஜ்மாரின் ஏற்பாட்டில் லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் சூரிச் ‘அன்பேசிவம்’ பிரிட்டன் ‘சிவகாமி அறக்கட்டளை நிதியம்’ போன்ற அமைப்புகளால் அம்பாறை மாவட்டத்திலுள்ள  வளத்தாப்பிட்டி ,பளவெளி, அட்டப்பள்ளம், காரைதீவு, வீரச்சோலை ,மண்டானை ,காயத்ரிகிராமம் ,மத்தியமுகாம் ,அன்னமலை ,சங்குமண்கண்டி, உமிரி ,சங்குமண்கிராமம் ,தங்கவேலாயுதபுரம், திருப்பதி ,கஞ்சிக்குடிச்சாறு ஆகிய பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.