அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ” ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( Zahirian Old Friends Association ) ( SOFA) ஏப்ரல் விடுமுறையின் போது மெற்றோபொலிடன் கல்லூரியின் அனுசரணையில் மிகப்பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்திருந்த இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்கள் பங்கேற்கவிருந்த ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டித் தொடர் ஏப்ரல் விடுமுறையின் போது கல்முனை ஸாஹிரா தேவியக்கல்லூரி மைதானத்தில் நொக்கட் முறையில் அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் கொண்டதாக .இடம்பெறவிருந்தது.
மஞ்சள் குழுவில் ஸஹிரியன் 90 அணி , உஸ்பா 91 அணி , ஸஹிரியன் 92 அணி , ஸஹிரியன் 90 ” ஸ் அணி , நொட் அவுட் 92 அணி , பவர் பிளேர்ஸ் 96 அணி , சுப்பர் ஹீரோஸ் 97 அணி , ஸஹிரியன் 98 அணி ஆகியனவும் , பச்சை குழுவில் ஸெஸ்டோ 99 அணி , ஸஹிரியன் வை 2 கே அணி , கிளசிக்கல் சீரோ வன் அணி , யுனைடெட் ஸஹிரியன் 2 ஓ அணி , பும் பும் ஸஹிரியன் அணி , அலியார் ரெஜிமென்ட் அணி , பெச் ஓ 5 அணி ஆகியனவும் , சிவப்பு குழுவில் ஸஹிரியன் லயன்ஸ் அணி , சுப்பர் வொரியஸ் அணி, கஜபா 08 அணி , கிறிக் 90 அணி , 91 மெட்ஸ் ( குழுமம்) அணி , ரீம் 92 அணி , மெக்ஸ் சாஜர்ஸ் அணி ஆகியனவும் , நீல குழுவில் கிளாஸ் ஒப் தேர்டீன் அணி , லெஜன்ஸ் ஒப் ஸாஹிரியன் அணி , ஸஹிரியன் விக்கின்ஸ் அணி , 16 ஸஹிரியன்ஸ் , ஸஹிரியன் வொல்வ்ஸ் அணி , ரீம் 99 அணி , ரீம் 2 கே அணி ஆகியன பங்கேற்கவிருந்தன.