படுவான்கரையின் எல்லைப்புற மக்களுக்கு சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் உதவிக்கரம்.

சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே அமைந்துள்ள ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஸ்தாபகரும் பிரதம குருவும் “சிவாகம துரந்தரர்”சிவ ஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் ,மற்றும் இராஜராஜேஸ்வரி அம்பாள் அடியார்களால் வழங்கப்பட்ட 85 உலர் உணவு பொதிகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசசெயலகத்துக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை என்னும் எல்லைப்புற கிராமத்தில் வாழும் மிகவும்கஸ்டநிலையில் உள்ள மக்களுக்கு கச்சக்கொடிசுவாமிமலை கிராமசேவை உத்தியோகஸ்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஊடாக மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.            நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருப்பதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் அனைவரும் உணவுக்கும் நிற்கதியாக வீடுகளில் முடங்கிக்கிடந்த நிலையில் மக்களின் இயல்பு நிலையினை சுவிஸ் நாட்டில் வாழும் முனைக்காட்டைச்சேர்ந்த மா.குமாரசாமி அவர்கள்  ஆலயத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் மற்றும் அம்மன் அடியார்கள்இவ் உதவியனை செய்ய முன்வந்துள்ளனர்.

தேவையறிந்துமிகவும் பின்தங்கிய பிரதேச மக்களுக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.