கல்முனை பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு  உலர்  உணவு  வழங்கியது. 

எம் எம்  ஜெஸ்மின்…
சமாதான ஊடக இயக்கத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.
 ஜெஸ்மினின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை பள்ளிவாசல் நிருவாகம் ஊடகத்துறையினருக்கு  உலர்  உணவு  வழங்கியது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரானா  வைரஸ் பாதிப்பின் காரணமாக கல்முனை   பிரதேசத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின்   நலனை  கருத்தில் கொண்டு கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரால்  அப்பள்ளிவாசல்  பிரதேசத்துக்குள் வசிக்கும்  ஊடகவியலாளர்களுக்கு  அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை முகைதீன் ஜும்மா பெரியபள்ளிவாசல் நிருவாக சபை தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்  தலைமையில்  பள்ளிவாசல் நிருவாக கட்டிடத்தில் இடம் பெற்ற  இந்நிகழ்வில்  குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 10 ஊடகவியலாளர்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய  உலருணவுப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது.