திருக்கோவிலில் மருத்துநீர் காலடிக்கு; பிரதேசசெயலர் ஏற்பாடு.

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு தேவையான மருத்து நீரை பொதுமக்களின் வீட்டுக்கு கொண்டு சென்று வழங்குவது தொடர்பாக ஆலய குருமார்களுடனான கலந்துரையாடல் கூட்டம்  திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் கு. சதிசேகரன், சிரேஷ்ட கிராம சேவை உத்தியோகத்தர் க.இராஜரெட்ணம், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர். தனுஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்களின் வீட்டுக்கு கொண்டு சென்று மருந்து நீரை வழங்குவதற்கு ஆலய நிருவாகத்தினரும் திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகத்தினரும் சம்மதித்துஉள்ளனர்.கலந்துரையாடலின்போதான படங்கள் இவை.