கல்முனைமாநகரசபை உறுப்பினர் ராஜனால் உலருணவு விநியோகிக்கப்பட்டது.

 

(காரைதீவு நிருபர் சகா)த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சமுகசேவையாளருமான சந்திரசேகரம் ராஜன் தனது சொந்த நிதியில் கல்முனை 1ஆம் பிரிவு மக்களுக்கும் ஏனைய பகுதிமக்களுக்கும் உலருணவு நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தார்.

தேர்தல்காலமாகையால் அவர் நேரடியாக இறங்காமல் கல்முனை சைனிங் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடாக அவற்றை வழங்கிவைத்தார்.

மாநகரசபை உறுப்பினர் ராஜன் இன்று.-6- நடைபெற்ற எளிமையானநிகழ்வில் நிவாரணப்பொதிகளை சைனிங் விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.ஜெயந்தன் செயலாளர் எஸ்.கிஷோர் மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கிவைத்தார்.

அவர்கள் அவற்றை நேற்றே உரிய மக்களிடம் வழங்கிவைத்தனர்.

இவ்வுதவிக்கு 20வீதமான பங்களிப்பை கல்முனை ஆதாரவைத்தியசாலை பிரதிவைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் சிறப்புவைத்தியநிபுணர் டாக்டர் எஸ்.இதயகுமார் மகப்பேற்று நிபுணர் டாக்டர் றசீன்மொகமட் ஆகியோர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.