கவனிப்பிற்குரியதான பனை, தெங்கு பதநீரும் -சீவல் தொழிலாளர்களும்

கொரொனா அனர்த்தம் நமது உள்@ர் உற்பத்திகள் சார்ந்தும் உள்@ர் அறிவுமுறைமைகள் சார்ந்தும் உள்@ர்ப் பொருளாதார பொறிமுறைமைகள் சார்ந்தும் அக்கறையுடன் செயலாற்றி அவற்றினை மீளுருவாக்கம் செய்வதற்கான தேவைகளை உருவாக்கியுள்ளதுடன் அதற்கான வெளிகளையும் திறந்துள்ளது.

நாட்டின் சுயசார்பான பொருளாதார வளங்களைப் பாதுகாத்து அவற்றை விருத்தி செய்து நிலைபேறான வளர்ச்சியை எய்தப் பெறுதலே, எதிர்காலத்தில் உலகந்தழுவி திடீரென்று ஏற்படக்கூடிய பேரனர்த்தங்களால் உருவாகும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான பொருத்தமான வழிமுறையாக அமைந்திருக்கும் என்பது தற்போது உணர்ந்து கொள்ளப்பட்டு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

அதாவது ஏகாதிபத்திய முதலாளித்துவ நுகர்வுப் பொருளாதாரம், வளர்ந்து வரும் நாடுகளில் விருத்தி செய்துள்ள சேவைத்தொழிற்துறையிலிருந்து விலகி அந்நாடுகள் சுயசார்பான உள்@ர் உற்பத்தித் தொழிற்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிச் செயற்பட வேண்டும் என்பதை கொரொனா பேரனர்த்தம் நம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு வலியுறுத்தி நிற்கின்றது.
இந்த உற்பத்தித் தொழிற்துறையானது மிகப்பெரும்பாலும் வினைத்திறனான கூட்டுறவுத் துறைக@டாகவே விருத்தி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும் பொருளியல் ஆய்வாளர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கான உதாரணமாக கரீபியன் தீவுகளுள் ஒன்றான கியூபதேசத்தின் சுயசார்புப் பொருளாதார நடவடிக்கைகளும் மருத்துவத் துறையின் விருத்தியும் எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றன. இன்று பேரனர்த்தச் சூழலில் யாரிடமும் கையேந்தாமல் வல்லரசுகளுக்கே மருத்துவ உதவிகளை வழங்கும் வல்லமையுள்ள தேசமாக கியூபா இயங்குவதற்கான அடிப்படையாக அந்நாட்டின் சுயசார்புப் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளே அமையப் பெற்றுள்ளன.
இப்பின்னணியில் இலங்கையின் சுயசார்பான உள்@ர்ப் பொருளாதார மூலங்களுள் ஒன்றாக உள்ள பனை மற்றும் தென்னை சார் உற்பத்தித் தொழிற்துறை சார்ந்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. விசேடமாக இத்தொழிற்துறையில் ஓர் அங்கமாகிய பதநீர் எடுக்கும் சீவல் தொழிலாளர்களின் மேம்பாடு குறித்து கவனஞ்செலுத்த வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.

தற்போதய ஊரடங்கு வேளையிலும் சீவல் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளமை இத்தொழிற்துறையின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்ட நடவடிக்கையாகவே நோக்கப்படுகின்றது. இந்தவகையில் எதிர்காலத்திலும் இத்தொழிற்துறையில் ஈடுபடும் நபர்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேலும் விருத்தி செய்யப்பட வேண்டியது காலத்தின் தேவையாகி நிற்கின்றது.

01. இத்தொழிற்துறையில் ஈடுபடும் நபர்களின் உழைப்பிற்குரிய ஊதியத்தை முழுவதுமாகப் பெற்றுக் கொள்வதற்கான கூட்டுறவு அமைப்பு வினைத்திறனுடன் இயங்கச்செய்யப்படல் வேண்டும்.

02. பதநீர் விற்பனைக்கான அனுமதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியாருக்கு வழங்கப்படாமல் இத்துறைசார் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

03. பதநீர் எடுப்பதில் அறிவும் திறனும் ஆர்வமும் உள்ள நபர்களை இனங்கண்டு அவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அவர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவுச் சங்கமாக இயங்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தேவையாகவுள்ளது.

04. சீவல் தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கான சமூகப்பாதுகாப்பு நிதிய அங்கத்துவம், மற்றும் காப்புறுதி அங்கத்துவம் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல்.

05. இலங்கையில் வினைத்திறனுடன் இயங்கிக்கொண்டிருக்கும் இத்துறைசார்ந்த சங்கங்களின் முன்மாதிரியான நடவடிக்கைகளை இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் அறிந்து, விளங்கித் தமது கூட்டுறவு நடவடிக்கைகளை மேம்படுத்துவற்கான இணைப்பாக்கங்களை மேற்கொள்ளுதல்.

06. பாதுகாப்பான முறைமையில் பதநீர் பெறுவதற்கான தொழில்நுட்ப வசதிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குதல். பிறநாடுகளில் இதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன.

இவ்விதமாக சீவல் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் மேலும் இனங்காணப்பட்டு அவற்றுக்குரிய ஆக்கபூர்வமான தீர்வுகள் கண்டறியப்பட்டு நடைமுறைக்குவரும் பொழுது, அது நமது நாட்டின் உள்@ர்ப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் உருவாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினைக்கு பகுதியளவில் தீர்வுகளைவழங்கும் நடவடிக்கையாகவும் அமைந்திருக்கும். நமதுநாட்டின் பனைமற்றும் தென்னைவளங்களின் பாதுகாப்பிற்கும் விருத்திக்கும் வாய்ப்புக்களைஉருவாக்கிக் கொடுக்கும்.

இத்தோடு சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு, நுகர்வுமற்றும் இத்தியாதிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவும் அமைந்திருக்கும்.

கலாநிதி.சி.ஜெயசங்கர்
து.கௌரீஸ்வரன்