மண்ணில் நல்லவண்ணம் வாழ…

வேகமாய் மிகவேகமாய்
விரைந்துவளர்கிறது உலகம்.
ஈடுக்கொடுத்துப் போகவில்லையெனில்,
இருப்பற்றுப் போய்விடுவீர்!
விற்பனர் எச்சரிப்பில்
விதிர்விதிர்த்தோம் வேகங்கொண்டோம்!

ஏனென்றும்தெரியவில்லை.
எதற்கென்றும் புரியவில்லை.
விதிர்விதித்தோம் வேகங்கொண்டோம்!

வீடுவாசல்,தொழில்,சொத்து,
சேமிப்பு,காப்புறுதி,கட்டுப்பணம்
சுற்றம் சுழன்றடிக்கும் வாழ்வில்
விருத்திகண்டோம்.

கேள்வியற்ற
கனவுவாழ்க்கைவிருத்தியின்
வேகச்சூழலில்
அளவற்றுஅள்ளுண்டோம் .

இயற்கையின் நுண்துளிர்ப்பில்
வேகங்கெட்டுஉலகமேஅடக்கம்.

தனித்துகிடக்கின்றோம்
ஏது செய்வதென்றுஅறியாமல்!

நின்றுபோய்விட்டஓட்டத்தில்
வெளிப்பட்டது,
இலக்கற்றஓட்டம்,
பாதுகாப்பற்றவாழ்வு.

அதிகாரம் நிலைநிற்க,
அதலபாதாளம் தேடி,
எதிரிகளை இலக்குவைக்கும்
அதிநுட்பஆயுதங்கள்
தும்மலுக்கும் இருமலுக்கும்
முகமழிந்துகிடக்கின்றன.

மண்;ணில் நல்லவண்ணம் வாழ…
உடலெதிர்ப்புசக்திகளே
பாதுகாப்பாம் மனிதருக்கு,

சி.ஜெயசங்கர்.