கொரோனாவினால் இலங்கையில் இறந்த நபரின் உடல் தகனம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த தர்மசிறி ஜனானந்தவின் உடல் இன்று கொட்டிக்காவத்த மயானத்தில் கடுமையான பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் (IDH) கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.

கொரோனா எனும் கொவிட்19 வைரஸ் தொற்றினால் இலங்கையில் இறந்த முதல் நபர் இவராவார்.