YUK எருவில் கிராமத்தில் உலர் உணவு வழங்கிவைப்பு.

 

(எருவில் துசி) கொரோனா வைரஸ் தாக்கம் உலகை அச்சத்தில் மத்தியில் உறையவைத்துக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மக்களை பாதுகாப்பதில்
ஒவ்வொரு நாடும் பல தந்துரோபாயங்களை கையாண்டு வரும் இக்காலத்தில் இலங்கை அரசும் தமது மக்களை பாதுகாக்கும் பொருட்டு பல உத்திகளை கையாண்டு வருகின்றது அந்த அடிப்படையில் மக்களுக்கு பரவாதவகையில் ஊரடங்கு சட்டத்ததை கடந்த சில தினங்களாக

அமுல்படுத்தி கொரோனா தொற்றை ஏனையவர்களுக்கும் ஏற்படாதவகையில் பாதுகாத்து வருகின்றது இவ்வாறான கால கட்டத்தில் அன்றாடம்
தொழில் புரிந்து உழைத்து சம்பாதித்துவரும் கூலி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் அன்றாட உணவு  தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியாத குடும்பங்களை இனங்கண்டு உலர் உணவு வழங்குவதாக அதன் செயற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர்.

தங்களது கழகங்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பவியல் நிகழ்வுகளின் போது பெரிதும் உதவியதாகவும் தாம் சமய,
சமூக, கல்வி பணிகளை மேற்கொள்வதாகவும் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்வில் கண்ணகி விளையாட்டுக்கழக தலைவர் யோ.சுரேஸ், உதய நிலாக்கலைக்கழக தலைவர் சு.துசியந்தன், இளைஞர் கழக செயலாளர்
இ.ரகுராஜ் மற்றும் கழகங்களின் ஆலோசகர்கள் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் கழகங்களின் தீவிர செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டு உணவு பொருட்களை பொதிசெய்து விநியோகித்தனர்.