பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருள் வழங்கிவைப்பு.

 

(எருவில் துசி) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் எருவில் தமிழ் அரசு கட்சி கிளையினர்
அதன் தலைவர்
சி.காண்டீபன்(எருவில் வட்டார கிளை உறுப்பினர்.)அவர்களின் மூலம் சீ மு. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினரிடம் விடப்பட்ட
வேண்டுகோளுக்கு
ஏற்ப கிராமத்தில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப உறுப்பினர்களும் அவர்களை சார்ந்தவர்களும்
பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளமையினை கருத்தில் எடுத்து
அத்தியாவசிய பொருட்களpன் தேவையினை சுட்டி காட்டியதற்கு இணங்க இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் அதன்
உறுப்பினர்களும்
அவசர அவசரமாக உலர் உணவு பொதிகள் பொதியிடப்பட்டு இன்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு
பகிர்ந்து அழிக்க பட்டது. கட்சி கிளையினர்
சீ.மு.இராசமாணிக்கம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்காலத்திலும் மேலும் பலரை கொண்டு உதவிகள் வழங்குவதற்கு
கிளை முயற்சிகள்
எடுப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினர் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இவ்வாறு பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.