கொரனாவுக்கு பலியான முதல் தமிழன். சுவிஸ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

சுவிஸில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியான முதல் தமிழர் இவர் !
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

புங்குடுதீவு இறுபிட்டி நான்காம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு.லோகநாதன் சதாசிவம் வயது 61 ஆகும் .

Swiss Rapperswil இல் எனும் இடத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் .

இவரது மனைவியும் பிள்ளையும் இலங்கை வவுனியாவில் வசித்துவருகின்றனர். ஒரு மகன் பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது . இவர்சக்கரை நோயாளியாகவும் இருந்த காரணத்தால் இலகுவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன . நான்கு நாட்களுக்கு முன் இத்தொற்றின் வீரியம் அறியாமல் மருத்துவரிடம் சென்ற வேளை அவர் வீட்டில் தனிமையில் இருந்து மருந்துகளை எடுக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார் . 3 நாட்களாக வெளியில் இருந்தே இவருக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் 4 வது நாள் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் காவல்துறையின் உதவியோடு கதவு உடைக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது !

இது செய்தி மட்டுமல்ல தனிமையில் இருப்போர் மற்றவர்களோடு தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது !
அன்னாரின்ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை 🙏

உலகளாவிய ரீதியில் நானறிந்த வகையில் கொரோனாவுக்குப் பலியான முதல் தமிழராகவும் , முதல் புங்குடுதீவைச்சேர்ந்த நபராகவும் இருக்கிறார் . இவரது உறவினர் விபரம் தேவைகருதி அறிந்தபோதும் தெரிவிக்க விரும்பவில்லை ! இவரது புகைப்படத்தை வைத்தே புங்குடுதீவு – 4ம் வட்டாரத்தினரிடம் விசாரித்தால் அறியலாம் .

எனக்கு அவரது சகோதரர், சகோதரிகள் , மற்றும் மைத்துனர்கள் , மைத்துனி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்தான் அவர்களுக்கு இந்த நேரம் ஆறாத்துயரை தொலைபேசி மூலம்மட்டும்தான் இரங்கலைத் தெரிவிக்க முடியும் ..!
அன்னாரின் குடும்ப உறவுகளுக்கு எனதுஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்🙏
அன்புடன் :
சுவிஸ் சுரேஷ்
🖤🖤🖤🖤

முகப்புத்தகத்திலிருந்து.