கொக்கட்டிச்சோலையில்   முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் கொள்வனவு

இரு தினங்களுக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதால் கொக்கட்டிச்சோலையில்   முண்டியடித்துக் கொண்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் இன்று (23) திங்கட்கிழமை மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

குழப்பங்களையும் நெருக்கடிகளையும் விபத்துக்களையும் தவிர்த்துக் கொள்வதற்காக பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

எரிபொருள் நிரப்பு நிலையம்,  பல்பொருள் வாணிபம், மரக்கறி விற்பனை நிலையங்கள் போன்றவற்றிலையே அதிகளவான மக்கள் குழுமியிருந்தனர்.