கல்குடா தொகுதியில் தனிமனிதனாக பிள்ளையான், கூட்டமைப்பு 3 பேரை நிறுத்தியுள்ளது.

 

 ( வேதாந்தி )

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வேட்பாளர் பட்டியல்களில்  பூர்த்தியடைந்துள்ள நிலையில்தமிழ்தேசியகூட்மைப்பு தமிழ் மக்கள விடுதலைப்புலிகள் கட்சிகளில் முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர்.

பல்வேறு கட்சியில் மாவட்டத்தின் 3 தொகுதிகளையும் மையப்படுத்தி வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில் ரி.எம்.வி.பி கட்சி தயாரித்துள்ள வேட்பாளர் பட்டியலில் கல்குடாத்தொகுதியை மையப்படுத்தி  பிள்ளையான் என அழைக்கப்படும்சந்திரகாந்தன் மட்டுமே போட்டியிடுகின்றார்.

அவர்களுடைய வேட்பு மனுவில் பட்டிருப்பு தொகுதியில் 4பேரும், மட்டக்களப்புத்தொகுதியில் 3பேரும், கல்குடாத்தொகுதியில் தனிமனிதனாக பிள்ளையான் மட்டும் போட்டியிடுகின்றார்.

இதை வைத்து பார்க்கும்போது கல்குடாத்தொகுதியில் தனக்கு நிரந்தர வாக்கு வங்கி உண்டெனவும் பட்டிருப்பு மட்டக்களப்பு  தொகுதி வாக்காளர்களை மையப்படுத்தியே பிள்னையான் தனது வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியகூட்டமைப்பின் மட்டக்களப்பு  வேட்பாளர்  பட்டியலில் கல்குடா தொகுதியிலிருந்து 3பேரும் மட்டக்களப்பு தொகுதியிலிருந்து 2பேரும் பட்டிருப்பு தொகுதியிலிருந்து 3பேரும் போட்டியிடுகின்றனர்.

   TMVP

1. சி. சந்திரகாந்தன்  ( கல்குடா)

2. பூ. பிரசாந்தன் (மட்டக்களப்பு)

3. அசோக் ஜீலியன் ( மட்டக்களப்பு)

4. கிருஸ்ணப்பிள்ளை ( பட்டிருப்பு)

5. மங்களேஸ்வரி ( பட்டிருப்பு)

6. வாணிதாசன் ( பட்டிருப்பு)

7. கே. கே. அரஸ் ( பட்டிருப்பு)

8.  ஆ.லோகேஸ்வரன் (மட்டக்களப்பு)

TNA

வேட்பாளர் விபரம்:

1)திரு.கி.துரைராசசிங்கம் (கல்குடா)
2)திரு.சீ.யோகேஸ்வரன் (கல்குடா)
3)திரு.ஞா.ஶ்ரீநேசன் (மட்டக்களப்பு)
4)திரு.கோ.கருணாகரம்(பட்டிருப்பு)
5)திரு.மா.உதயகுமார் (மட்டக்களப்பு)
6)திரு. ஞானப்பிரகாசம் (பட்டிருப்பு)
7)திரு. ந.கமலதாஷன் (கல்குடா)
8)திரு. சாணக்கியா ராகுல் ராஜபுத்திரன்( பட்டிருப்பு)