வேட்புமனுவில் ஒப்பமிட்டார் பிள்ளையான்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்), கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பம் இடும் நிகழ்வு, இன்று (16) நடைபெற்றது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைவாக, சந்திகாந்தன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

நாளை மறுதினம் (18) நண்பகல் 12.40 மணியளவில் மேற்படி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக, கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.