வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களை திட்டமிட்டுஅழிக்கும் யுக்தி!

பெற்றி.கம்பசில்  கொரோனா நோயாளர்களை தங்கவைப்பதென்பது
வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களை திட்டமிட்டுஅழிக்கும் யுக்தி!
உடனடியாக நிறுத்தவேண்டும்  இன்றேல் போராட்டம் வெடிக்கும்!
காரைதீவுப்பிரதேசபையில் கண்டனத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்.
காரைதீவு  நிருபர் சகா

 
சர்வதேச வியாதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் மிகவும் கொடி ஆட்கொல்லி நோயான  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தொற்றுநோயளர்களை மட்டு.மாவட்டத்திலுள்ள பற்றி.கம்பசில் தங்கவைப்பதென்பது வடக்கு கிழக்கு வாழ்  தமிழ்பேசும் மக்களை திட்டமிட்டு அழிக்கும் ஒரு யுக்தியாகவே நாம்பார்க்கிறோம். இதனை நாம் வன்மையாகக்கண்டிக்கிறோம். எனவே இம்முயற்சியை உடனடியாக நிறுத்தவேண்டும்.இன்றேல் மக்கள் பேராட்டம் வெடிக்கும்.

இவ்வாறான கண்டனத்தீர்மாமொன்றை காரைதீவு பிரதேசசபையின் விசேட அமர்வு (10) செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சபையின் விசேட அமர்வு (10) சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்நடைபெற்றபோது தவிசாளரால் இப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.

அதற்கு சமுகமளித்திருந்த 10உறுப்பினர்களும் ஏகோபித்தமுறையில் கருத்துக்களைத் தெரிவித்துஆதரவளித்தனர். 
இத்தீர்மானத்தை இன்றே பாக்ஸ்  மூலம் ஜனாதிபதி தொடக்கம் சம்பந்தப்பட்ட சகலஅதிகாரிகளுக்கும் அனுப்பவேண்டும் என்றும் பணிக்கப்பட்டது.


உபதவிசாளர் ஜாகீர் உறுப்பினர்களானஇஸ்மாயில் பஸ்மீர் நேசராசா ஜலீல் ஜெயராணி பூபாலரெத்தினம் மோகன் றனீஸ் காண்டீபன் ஆகியோர் உரையாற்றுகையில்:

இலங்கையில் 9 மாகாணங்கள் இருக்கையில் பலதரிசுநிலங்கள் தெற்கில் இருக்கையில் இந்தத்தொற்றுநோயாளிகளை ஏன் கிழக்கிற்கு கொண்டுவரவேண்டும்? வடக்கு கிழக்கு மக்களைதிட்டமிட்டு அழிக்க அரசு நினைக்கின்றதா? பொருளாதாரத்தை நசுக்க முனைகிறதா?
உடனடியாக இம்முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும்.
வடக்குகிழக்கு மக்களை இன்றைய அரசாங்கம் நம்பவில்லை. 
 
தனிச்சிங்கள்மக்களை மட்டுமே நம்பி காயை நகர்த்திக்கொண்டிருக்கிறது. அதனால் தான் மொட்டுச்சின்னத்தில் வடக்குகிழக்கில் தமிழ்பேசும் வேட்பாளர்களைநிறுத்தமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே அதைவிடுத்து வடக்குகிழக்கு மக்களை மனிதனாகமதித்துச் செயற்படுங்கள். நல்லிணக்கம் தானாக உருவாகும். நாடும் வளரும்அபிவிருத்தி காணும் என்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுநோயாளர்களை மட்டு.கெம்பசில் தடுத்துவைப்பதற்கான அரசாங்கத்தின் யோசனைக்கு முதன்முதலில் எதிர்ப்புத்தெரிவித்து கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது காரைதீவு பிரதேசசபையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சபைக்கும் தவிசாளருக்கும் தெரியாமல் தமதுஎல்லைக்குள் உள்ள சபை வீதிகளுக்கு  அபிவிருத்திஎன்றபோர்வையில் பிரதேசசெயலரும் சிலஅரசியல் வாதிகளும் கல் வைக்கின்ற அரசியல் நாடகம் பாராளுமன்றம்கலைக்கப்பட்டு தேர்தல்திகதிஅறிவிக்கப்பட்டபின்னர் அரங்கேறும் அவலநிலையைக்கண்டித்தும் கண்டனப்பிரேரணை கொண்டுவரப்பட்டது.