சாதாரண தர பரீட்சை பெறுபேறு இம் மாத இறுதியில்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு இம் மாத இறுதியில் வெளியிடப்படவிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியிலான நிலை மற்றும் முழு நாட்டிலுமான நிலை இம் முறை வெளியிடப்படமாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

கடந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரிட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் பரீட்சைக்கு தோற்றினர்.