தாய்மொழியாம் தமிழை வளர்த்த பெரியார்கள் கிழக்கில் அதிகம்.

நல்ல ஆரம்பம் நல்ல விளைச்சலைத் தரும்: நுட்பம் அவசியம்!
தமிழ்மொழித்தினபோட்டி ஆரம்பவிழாவில் கல்விப்பணிப்பாளர் நஜீம்.
 (காரைதீவு  நிருபர் சகா)

எமது தாய்மொழியாம் தமிழ்மொழியை வளர்த்த பெரியார்கள் அறிஞர்கள் ஒப்பீட்டளவில் கிழக்கில் அதிகம். இருந்தும் தேசிய தமிழ்மொழித்தினப்போட்டிகளில் வடக்கிற்கு அடுத்தகட்டத்திலேயே கிழக்கு இருக்கிறது.எனவே புதிய நுட்பங்களுடன் முன்னேற முயற்சி அவசியம்.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் நாவிதன்வெளிக்கோட்ட தமிழ்மொழித்தினப்போட்டியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டுரையாற்றுகையில் தெரிவித்தார்.
இவ்விழா வலயபிரதிக்கல்விப்பணிப்பாளரும் பதில் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளருமான  செல்வி வி.நிதர்சினி தலைமையில் நாவிதன்வெளி அன்னமலை  மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
அங்கு பணிப்பாளர் நஜீம் மேலும் உரையாற்றுகையில்:
நல்லஆரம்பம் நல்ல விளைச்சலைத்தரும் என்பார்கள்.இங்கு நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு தேசியகீதம் தமிழ்மொழிவாழ்த்து வரவேற்பு நடனம் உள்ளிட்ட சகல சிறப்பம்சங்களுடன் நடைபெற்றமை நல்லதொரு ஆரம்பமெனலாம்.
எனவே நல்ல விளைச்சலைத்தரும் என்று நம்பலாம். இதுகோட்ட மட்டப்போட்டி.  உங்களுக்குள் திறமையானவர்கள் எப்படியோ வருவீர்கள். அதாவது விளைச்சல் கிடைக்கும். எனினும் நல்லவிளைச்சல் கிடைக்கவேண்டும்.எனவே அடுத்தடுத்த  வலய மாகாணப்போட்டிகளில் உங்கள் திறமை மேலும் வெளிப்படவேண்டும். அதற்கு புதியபுதிய யுக்திகள்பயன்படுத்தப்படவேண்டும்.
எமது வலயத்தின் கோரக்கர் தமிழ் வித்தியாலய வில்லுப்பாட்டுநிகழ்ச்சிகடந்தாண்டு முதலிடத்தில் வரவேண்டியது.ஆனால் இரண்டாமிடத்தைப்பெற்றது.அதற்கு அவர்கள்சொன்ன காரணம். பிரதானவில்லுப்பாட்டுப்பாடுபவரை விட பக்கப்பாட்டுப்பாபடுபவர்  கம்பீரமாக நல்லஉடற்கட்டுடன் இருந்தார் என்பதே.


எனவே போட்டிவிதிமுறைகளைஅனுசரிக்கும்அதேவேளை புதிய யுக்திகள் நுட்பங்களைபயன்படுத்த  வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.என்றார்.

விழாவில் வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா வலயத்திற்கான தமிழ்மொழிபாடஆசிரியஆலோசகர் இசட்.எம்.மன்சூர் பாடசாலை அதிபர்ளான  எஸ்.பாலசிங்கம்  எஸ்.சாமித்தம்பி உள்ளிட்ட நடுவர்கள் ஆசிரியர்கள்கலந்துகொண்டனர்.
மாணவர்கள்ஆர்வத்துடன் போட்டி நிகழ்ச்சிகளில்பங்கேற்றனர்.