கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

கிழக்கு இலங்கையில் சிறப்புற்று விளங்குவதும்,  தானாக தோன்றியதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இன்று(21) வெள்ளிக்கிழமை சிவராத்திரி விரத பூசை வழிபாடுகள் நடைபெற உள்ளன.

நான்கு சாம பூசைகள் நடைபெற உள்ளத்துடன், பஜனை வழிபாடு,  கதாப்பிரசாங்கம்,  கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக அன்னதானம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.