விசேடதேவையுள்ள மாணவர் 76பேருக்கு பாடசாலைபைகள்.

(காரைதீவு நிருபர் சகா)சம்மாந்துறை வலயத்திலுள்ள 76 விசேடதேவையுள்ள மாணவர்களுக்கு பாடசாலைப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.

வலயத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் சம்மாந்துறை அல்மர்சத் மகாவித்தியாலயம் றாணமடு இந்து மகாவித்தியாலயம் அமீரலிபுரம் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய 3 பாடசாலைகளுக்கு இப்புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எம்.எஸ்.அமீர் ஹைதர்அலி கணக்காளர் எஸ்.திருப்பிரகாசம் உள்ளிட்ட அதிதிகள் அவற்றை வழங்கிவைத்தனர்.