சாய்ந்தமருது நகரசபைக்கான அறிவிப்பு : அப்பகுதி மக்கள் கொண்டாட்டம்

கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்படும் சாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி இன்று (15) வெளியிடப்பட்டது.

இதன்படி குறித்த நகர சபையை 2022 மார்ச் 20ஆம்  திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சாய்ந்த மருது நகரசபைக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.