இவ் அமர்வு நேற்று(13) வியாழக்கிழமை பிரதேசசபையின் சபா மண்டத்தில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
பிரதேசசபையில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு சபைக்க எதிராக செயற்படும் ஓரிரு உறுப்பினர்களின் சுயருபத்தை அறிந்து வேதனையடைகின்றேன்.
கொடுத்தால் நல்ல தவிசாளர் மறுத்தால் தவிசாளர் இனவாதி. அல்லது கெட்டவர். சவப்பெட்டிக்கான பிரேரணை என்றாலும் எதிர்க்கவேண்டுமென்பதற்காக எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த துரோகத்தனத்தையிட்டு வெட்கப்படவேண்டுமே தவிர சிந்திப்பதற்கு எதுவுமேயில்லை.
மாவடிப்பள்ளி தெருவிளக்கு விடயத்தில் சஹ்ரானின் பெயரைப்பயன்படுத்தி எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்கள். எனக்கெதிராக பல துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்களென உறுப்பினர் றனீஸ் கூறினார். முகநூலில் இனவாதி என்று தூற்றினார்கள். இதன்பின்னால் சிலர் அரசியல் செய்யமுற்பட்டுள்ளனர். அது வெற்றியளிக்காது.
காரைதீவுப்பிரதேசத்திலுள்ள 17 பிரிவுகளும்ஒன்றாகவே நோக்கப்படுகிறது.அனைவரும் சகோதரர்களே. யாரையும் பிரித்துப்பார்க்க நான் தயாரில்லை. நீங்கள் பிழைவிட்டாலும் நான் மன்னிக்கிறேன். அது எமது பெருந்தன்மை.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை எம்மிடம் கேளாமல் அனுமதி பெறாமல் வீதி மின்விளக்குகளை அமைத்துவிட்டு மின்சாரக்கட்டணத்தை எம்மிடம் செலுத்துமாறு கோருவதில் என்ன நியாயம்? வருமானம் குறைந்த எமதுசபையால் அச்சுமையை சுமக்கமுடியாது.
நாம் இச்சபையை பாரமெடுக்கும்போது 20லட்ச ருபா கடனுடன்தான் பாரமெடுத்தோம். இப்படிப்பட்ட அவலத்தை மறுசபைக்கு விட்டுக்கொடுக்க நான் இடமளிக்கமாட்டேன். என்றார்.
இறுதியில் எதிர்வரும் 10நாட்களுள் வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகளை அழைத்து சபையில் ஆலோசனை சபையினர் உறுப்பினர்கள் பள்ளி மற்றும் ஆலயத்தலைவர்கள் சகிதம் தீர்க்கமான முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
புதிதாக சபையால் அமைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு சீலை வாங்கும் பிரேரணைக்கு உறுப்பினர்களான ச.நேசராசா ஆ.பூபாலரெத்தினம் ஆகிய இருவரும் எதிர்ப்புத்தெரிவித்தனர். ஏனையோர் ஆதரவளித்தனர்.
இந்த நிலையில் உரையாற்றிய தவிசாளர் ஜெயசிறில் :சவப்பெட்டி என்றாலும் எதிர்ப்பதானால் எதிர்க்கலாம். நாம் எதனையும் ஒளித்துமறைத்துச் செய்வதல்ல.னைத்துவிடய்ஙகளையும் சபையில் தெரியப்படுத்தியே ஜனநாயகமுறைப்படி வாக்கெடுப்பிற்கு விட்டே செய்கிறேன்.