தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தோர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விஜயம்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினைப் பதிவு செய்வது தொடர்பிலான செயற்பாடுகளை முன்நகர்த்தும் முகமாக அக்கட்சியின் தலைவர் உட்பட குழுவினர் இன்றைய தினம் (14) இராஜகிரியவில் அமைந்துள்ள தோர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா மற்றும் அதன் செயலாளர் நா.அன்ரனி உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.