விகாரைகள் தொடர்பாக பிரதமர் கலந்துரையாடல்

புத்த சாசனம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அகில இலங்கை பிக்குகள் அமைப்பு நேற்று அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களை எல்லைகளிட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார்.

புத்த சாசனம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அகில இலங்கை பிக்குகள் அமைப்பு நேற்று அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தனர்.

இதன்போது கடலை அண்டிய விகாரைகள் யாழ்ப்பாணத்தின் வரலாற்று இடங்கள் நெடுந்தீவில் உள்ள பண்டைய விகாரை முல்லைதீவில் உள்ள கருகந்த விகாரை மற்றும் பிற தொல்பொருள் இடங்கள் குறித்து தொல்பொருள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலாச்சார அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.