சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறிப் போராட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05)கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதைத் தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.