வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை சிரமத்திற்கும் மத்தியில் உலங்கு வானூர்தி மூலம் மீட்கும் பணியில் மட்டு அரச அதிபர்

ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேப்பவெட்டுவான் வீதியில் அமைந்துள்ள மாவடி ஓடை, புலுட்டுமான்ஓடை ,பெரியவட்டவான் , ஈரலக்குளம், இழுக்குப்பொத்தானை , பெருமாவெளி போன்ற கிராமங்கள் வெள்ளத்தால் அனர்த்த நிலைக்கு உள்ளாகப்பட்டுள்ளன.

மாவடிஓடை வீதி வெள்ளத்தால் நிரம்பி அமிழ்ந்து காணப்படுகின்றது .

மாவட்ட செயலகத்தின் அனர்த்த பிரிவு , பிரதேச சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் , ஏறாவூர் பற்று செயலக பிரிவினர், கடற் படையினர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர்.
இன்று (21.12.2019) மக்களை கரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிரமைகளை நேரில் பார்வையிட மட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மாவட்ட  அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் நிலமைகளை அவதானித்ததுடன் விமானப்படை, கடற்படையினரின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை கரைசேர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை

மட்டக்களப்பு மாவடி பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள 26 பேரை மீட்பதற்கு இலங்கை விமானப்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியிருந்த மூவர் விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலி ஹெப்டர் மூலம் மீட்கப்பட்டனர். தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இதேவேளை வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் கடற்படையில் உரிய பாதுகாப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஊடக பேச்சாளர் லெப்டின் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்