மட்டக்களப்பில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை முற்றாக நீரில் மூழ்கி நாசம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் காரணமாக 4375 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச்செய்கை முற்றாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சோளம், நிலக்கடலை, கௌபி, பயறு, கடலை உட்பட மேட்டு நிலப் பயிர்ச்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பெருமளவிலான விவாசாயிகள் மேட்டு நிலப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தில் நெற் பயிர்ச்செய்கைக்கு அடுத்த படியாக மேட்டு நிலப்பயிர்ச் செய்கையிலேயே அதிகமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.