ஐந்து விருதுகளை வென்ற ஆரையூர் அருள்

மண்முனை பற்று பிரதேச செயலகம் நடாத்திய, பிரதேச இலக்கிய திறந்தமட்டப் போட்டிகளில் பங்கேற்று ஐந்து விருதுகளை ஆரையம்பதியைச் சேர்ந்த ஆரையூர் அருள் என அழைக்கப்படும் மூ.அருளம்பலம் பெற்றுக்கொண்டுள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகம் அண்மையில் நடாத்திய இலக்கிய விழாவின் போதே, இவருக்கான சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

 

மட்டக்களப்பின் ஆரையம்பதியில் கலைத்துறையில் சாதனை படைக்கும் ஒரு ஈழத்துக் கலைஞர்தான் ஆரையூர் அருள் அவர்கள்.

”திரு.மூத்ததம்பி அருளம்பலம்” ஆரையம்பதி மண்ணின் கலைப் பெருமையை தாங்கி நிற்கும் நாமம். ஆரையூர் அருள் என்ற புனைப்பெயரில் 1960 முதல் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்த இவா் கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், வில்லுப்பட்டு, நாடகம், நாட்டுக்கூத்து  என சகல துறைகளிலிலும் தனது கால்தடத்தை  பதித்துள்ளார். இதுமட்டுமல்லாது இவற்றை தாண்டி இவரது முயற்சி இன்னுமெரு பாரிமணத்தின் தோற்றம் ‘ஒலிப்பேழை‘. கலைஉலகின் ரசிப்புத்தன்மை மாற்றங்களை உணா்ந்ததாலும், இறைபக்தியின் காரணமாகவும், இவரது கலைமுயற்சி ஒலிப்பேழை (இறுவட்டு) வெளியீடு வரை சென்றிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிக ஒலிப்பபேழைகளுக்கு வரியெழுதி வெளியிட்ட பெருமையை ஆரையூர் அருள் பெற்றுக்கொண்டதனால், கலைப்பணியுடன் இம்மண்ணையும் இவா் பெருமைப்படுத்துகின்றார்.

1949.09.19 ம் திகதி பிறந்து தனது ஆரம்ப கல்வியை ஆரையம்பதி இ.கி.மி.த.க.பாடசாலையிலும் உயா்கல்வியை சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்று முதலாம் தர இலங்கை அதிபா் சேவையிலுள்ள இவா் தனது அரச சேவையை ஆசிரியராக தொடங்கியவா். 40 வருட கலையுலக வாழ்க்கைக்கு முதன் முதலில் கிடைக்கப்பட்ட பட்டம்  ‘கூத்துக்கலைஞன்‘, மண்முனைப் பற்று சாகித்திய விழாவில் முன்னாள் அரசாங்க அதிபர் திரு.சண்முகம் அவர்கள் வழங்கி கௌரவித்தார். இதன் பின்னா்  இவா் பெற்ற விருதுகளை பின்வருமாறு பட்டியலிட்டே கூறவேண்டும்.

1997 ம் ஆண்டு ‘அண்ணாவியார்‘ மண்முனைப் பற்று சாகித்திய விழாவின் போது இக் கௌரவம் வழங்கப்பட்டது.

2002 ம் ஆண்டு ‘நாட்டுக்கூத்து கலைஞன்‘ என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களால் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2004 ம் ஆண்டு ‘சமாதான நீதவான்’ நீதி அமைச்சினால் வழங்கப்பட்டது.

2009 ம் ஆண்டு ‘கீர்த்தி சிறி‘ தேசிய விருது சமாதான நீதவான் முன்னாள் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணியால் வழங்கி கௌரவிக்கப்பட்டது

2009 ம் ஆண்டு ‘கலைஞர்‘ கௌரவிப்பு இவ் விருதினை மண்முனைப்பற்று பிரதேச கலாச்சார பேரவையால் வழங்கப்பட்டது.

2009 ம் ஆண்டு ‘கலைஞானி‘ ஆரையம்பதி மகாவித்தியாலய நட்புறவுக் குழுவினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2010 ம் ஆண்டு ‘முதலமைச்சர் விருது‘ கிழக்கு மாகாணசபையால் கிராமிய கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக முதலமைச்சரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2010 ம் ஆண்டு ‘கலாபூசணம்‘ தேசிய விருது நாட்டுக்கூத்து, இலக்கியத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2011 ம் ஆண்டு ‘இறைஞான தேசிகர்‘ நாவற்குடா ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய அறங்காவல் சபையால் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி.கபாலீஷ்வரானந்தா அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2012 ம் ஆண்டு ‘சாதனையாளர்‘ விருது ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவரது படைப்புக்கள்

கவிதைகள்

 

01. கிழக்கொளி(ஒளி-2) 1992 ‘பாரதி மீண்டும் பிறக்காதிருப்பதே நன்று’

02. கிழக்கொளி (கதிர் 4 1999) ‘வித்தகன் விபுலாநந்தன்’

03. ஒளி–சஞ்சிகை (ஆடி 1996) ‘ஒற்றுமைக் கரவொலி ஒலிக்கட்டும்’

04. ‘தமிழ் மணி’ அன்பு மணி பாராட்டு விழாச் சஞ்சிகை ‘இசை பாட வாருங்கடி, எங்கள் அன்பு மணி’

05. சிகரம் – சஞ்சிகை (2003) ‘மண்முனைப் பற்றுச் சிறப்பு’

06. தினக்குரல் (2006) ‘தாயவள் ஏங்கி நிற்கிறாள்’

07. சிகரம் – சஞ்சிகை (2009) மண்முனைப்பற்றுச் சாகித்திய விழா வெளியீடு

08. கதிரவன் (2009) ‘மண்முனைப்பற்று பிரதேசம்’

09. கதிரவன் (2010) ‘கும்மி’ (சிறுவர் தினம்)

10. தினக்குரல் (2010) ‘ஆரையூர் அமரன்’

11. தென்றல் (2011) ‘தென்றல் வீசிது’

12. பட்டிருப்பு வலயமட்டம் 1ம் இடம் ‘நாட்டாரியலில் சிறுவருரிமை’

13. தென்றல் (2012) ‘அமர தீப அமரசிங்கம்’

 

சிறுகதை

01. ‘அவள்’ (1986) – 01ம் பரிசு – (பட்டிருப்புக் கோட்டம்) புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் பாராட்டு

02. ‘சமுதாய தராசு’ (2000) தினக்கதிர்

03. ‘மாணவர் மையக் கல்வி’ (2003) ‘குரு களம்’ சஞ்சிகை

04. ‘பாரம் குறைந்தது’ (2010) சிகரம் முதலாம் இடம்

05. ‘நினைவலைகள்’ (2012) வசந்தம்

06. ‘ஒற்றுமையே உயர்வு தரும்’ முதலாமிடமும், மூன்றாமிடமும் பெற்றது. (2012)

 

கட்டுரைகள்

01. ‘பரீட்சயமான காவியங்களில் வரும் காவிய நாயகர்கள்’ (1998) முதலாமிடம், மண்முனை தென்மேற்கு பிரதேசம்.

02. ‘இந்து மதத்தின் சிறப்பம்சம்’ (1998) இரண்டாமிடம் மண்முனை தென்மேற்கு பிரதேசம்.

03. ‘கும்பாவிசேகம்’ (1999) வசந்தம்

04. ‘மனித சமுகத்திற்கு கணணியின் பங்களிப்பு’ (2000) இரண்டாம் பரிசு அம்பாறை மாவட்டம்

05. இந்து ஆலய அமைப்பும் கிரியை முறையும் (2001)

06. ‘கணிதத்துறைக்குஇராமானுஜரின் பங்களிப்பு’ (2001) இரண்டாமிடம் பட்டிப்பளை பிரதேசம்

07. ‘இந்துமதத்தின் சிறப்பம்சம்’ (2002) களம்

08. ‘அருளாட்சி செய்யும் ஆரைநகர்க் கண்ணகை’ (2003) தினகரன்

09. ‘சைவசமயத்தில் கணபதி வழிபாடு’ (2004) தினகரன்

10. ‘விநாயக விரதங்கள்’ (2005) கலாவதி

11. ‘ஆரையம்பதி ஆகாயப்பேச்சி’ (2006) தினகரன்

12. ‘முதியோரைப் புறக்கணிப்பர் சமுதாய விரோதிகள்’ (2007) இரண்டாமிடம்

13. ‘சமுதாய முன்னேற்றத்தில் இளைஞரின் பங்கு’ (2008) இரண்டாமிடம் மண்முனைப்பற்று

14. ‘வாசிப்பதன் மூலம் பண்புடைய சமுதாயத்தை உருவாக்கல்’ (2009) மூன்றாமிடம்

15. ‘அமரர் நல்லையாவின் பொருளாதார, சமூகப்பணி’ (2011) கதிரவன்

16. ‘மண்முனைப்பற்று கிராமியக் கலைகள்’ (2012) முதலாமிடம் மண்முனைப்பற்று

17. ‘சிறுகதை நூல் விமர்சனம்’ (2012) முதலாமிடம் மண்முனைப்பற்று

18. ‘கவிதைகள் தொகுப்பு விமர்சனம்’ (2012) முதலாமிடம் மண்முனைப்பற்று, மூன்றாமிடமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்.

 

வில்லுப் பாட்டுக்கள்

01. வித்தகர் விபுலாநந்தர் (1975)

02. ஜீவசேவையே சிவசேவை (1976)

03. விதைத்தவினை (1920)

04. சித்திர புத்திரர் (1987)

05. ஞானவிளக்கு (1989)

06. அகிலம் போற்றும் ஆசிரியர் (1989)

07. அரசியல் பிழைத்தோர்க்கு அறன் கூற்றாகும் (1993)

08. சினம் சினந்தாரைக் கொல்லும் (2000)

09. சுத்தம் சுகம் தரும் (2001) மாவட்ட மட்டம் முதலாமிடம்

10. நீதி தவறிய நீசன் (2006)

11. நோதலும் தணிதலும் (2011) மாவட்ட மட்டம் இரண்டாமிடம்

12. தெரிந்து தெளிதல் (2012) மாவட்ட மட்டம் இரண்டாமிடம்

 

நாடகங்கள்

1. நல்லதம்பி – சமூக நாடகம் (1973)

2. ஒரேதாய் பிள்ளை – சிறுவர் நாடகம் (1975)

3. புதிய விதி சமைப்போம் – சமூக நாடகம் (1979) முஸ்லிம் பாத்திரம்

4. குந்தியின் வரம் – இதிகாச நாடகம் (1981) அருச்சுணன் பாத்திரம்

5. சிலைகளும் சிரிக்கவைக்கும் – நகைச்சுவை நாடகம் (1981) மொடழழகி பாத்திரம்

6. அளவான குடும்பம் – சமூக நாடகம் (1982) முதலாமிடம், அம்பாறை

7. திருநாவுக்கரசர் – புராண நாடகம் (1986) நாவுக்கரசர் பாத்திரம்

8. பெரியோரைக் கனம் பண்ணுவோம் – சமூக நாடகம் (1987)

9. மரவளம் வளர்ப்போம் – சிறுவர் நாடகம் (1990)

10. தியாக தீபம் – சமூக நாடகம் (1991) முதலாமிடம் பட்டிப்பளைப் பிரதேசம்

11. கல்வியே கலங்கரை விளக்கு – சிறுவர் நாடகம் (1991)

12. ஊர்வசி பெற்ற சாபம் – புராண நாடகம் (1993)

13. குந்தியின் மடியில் – இதிகாச நாடகம் (1994)

14. முயந்சி திருவினையாக்கும் – சிறுவர் நாடகம் (1999)

15. கல்வியழகே அழகு – சிறுவர் நாடகம் (2000)

16. உண்மை விளங்குது – சிறுவர் நாடகம் (2002) இரண்டாமிடம், மண்முனைப்ற்று பிரதேசம்

17. இறை நம்பிக்கை – புராண நாடகம் (2004)

18. இணைந்த இதயங்கள் – சமூக நாடகம் (2006)

19. மாய வேட மன்னன் – வரலாற்று நாடகம் (2008)

 

நாட்டுக்கூத்து

1964ம் ஆண்டு ‘சத்தியவான் சாவித்திரி’ தென்மோடி (நெறியாள்கை, பாத்திரம்-சாவித்திரி)

1974ம் ஆண்டு ‘வள்ளி திருமணம்’ வடமோடி(பொலநறுவை முத்துகல் தமிழ் மகா வித்தியாலயம்- நெறியாள்கை)

1975ம் ஆண்டு ‘செல்வச்செருக்கு’ நவீனம் (நெறியாள்கை)

1981ம் ஆண்டு ‘வாலி வதம்’ வடமோடி (இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது, பாத்திரம்-தாரை, இலக்குமனன்)

1982ம் ஆண்டு ‘கீசகன் வதை’ வடமோடி (பாத்திரம்-துரோபதை)

1983ம் ஆண்டு ‘பணச் செருக்கு’ வடமோடி (நவீன நாட்டுக் கூத்து) (பொத்துவில் மெ.மிசன் வித்தி- நெறியாள்கை)

1983ம் ஆண்டு ‘இடும்பன் வதை’ வடமோடி (நெறியாள்கை)

1985ம் ஆண்டு ‘லவ குசா’ வடமோடி (நெறியாள்கை)

1992ம்ஆண்டு ‘அனுமன் வசந்தன்’ (நெறியாள்கை)

1992ம் ஆண்டு ‘வழி தவறிய வஞ்சி’ வடமோடி (நவீன நாட்டுக்கூத்து) (நெறியாள்கை, பாத்திரம்-தாய்)

1993ம் ஆண்டு ‘அனுமன் கண்ட சீதை’ வடமோடி (நெறியாள்கை, பாத்திரம்-சீதை)

1993ம் ஆண்டு ‘வசந்தன் கூத்து’ (நெறியாள்கை)

1994ம் ஆண்டு ‘சூரசம்காரம்’ தென்மோடி (பாண்டிருப்பு மகா வித்தியாலயம்- நெறியாள்கை)

1994ம் ஆண்டு ‘மங்கள தீபம்’ நவீன நாட்டு கூத்து (நெறியாள்கை, பாத்திரம்-தந்தை)

1997ம் ஆண்டு ‘மறலியை வென்ற மங்கை’ தென்மோடிக் கூத்து – 01ம் பரிசு(மண்முனைப்பற்று பிரதேச செயலகம்) (நெறியாள்கை, பாத்திரம்-சாவித்திரி)

1997ம் ஆண்டு ‘சுந்தரி விடு தூது’ தென்மோடி – 01ம் பரிசு (தமிழ் மொழித் தினம் – வடகிழக்கு மாகாண சபை) (நெறியாள்கை)

1998ம் ஆண்டு ‘இரணிய சங்காரம்’ தென்மோடி – 01ம் பரிசு (தமிழ் மொழித் தினம் – வடகிழக்கு மாகாண சபை) (நெறியாள்கை)

2002ம் ஆண்டு ‘குருதட்சணை’ வடமோடி – 02ம் பரிசு (மட்டக்களப்பு வலயம்) (நெறியாள்கை)

 

ஒலிப்பேழை (இறுவட்டு) வெளியீடு

01. 1992ம் ஆண்டு ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயம் (காவடி, ஊஞ்சல்)

02. 1993ம் ஆண்டு ஆரையம்பதி கண்ணகி அம்பாள் ஆலயம் (கும்மி , தாலாட்டு, பக்திப்பாடல்கள்)

03. 1994ம் ஆண்டு ஆரையம்பதி பேச்சியம்பாள் ஆலயம் (காவடி, கும்மி, தாலாட்டு ,கரகம், காவியம்)

04. 1995ம் ஆண்டு ஆரையம்பதி செல்வாநகர் காளி கோயில் (தாலாட்டு, கும்மி ,ஆக்கப் பாடல்கள்)

05. 1996ம் ஆண்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரி அம்பாள் ஆலயம் (கரகம், காவடி, தாலாட்டு, ஆக்கப்பாடல்)

06. 1997ம் அண்டு கோளாவில் மாரியம்பாள் ஆலயம் (காவடி, கும்மி, ஆக்கப்பாடல்)

07. 2001ம் ஆண்டு ஆரையம்பதி வடபத்திரகாளி கோயில் (புதிய ஆக்கப்பாடல், காவியம்)

08. 2001ம் ஆண்டு கல்லடி உப்போடை பேச்சியம்பாள் ஆலயம் (காவடி, கும்மி, தாலாட்டு, ஆக்கப்பாடல்)

09. 2002ம் ஆண்டு புதுக்குடியிருப்பு கண்ணகி அம்பாள் ஆலயம் (கும்மி , தாலாட்டு, பக்திப்பாடல்கள்)

10. 2002ம் ஆண்டு மஞ்சஞ்தொடுவாய் வீரபத்திரர் காவியம்

11. 2003ம் ஆண்டு ஆரையம்பதி ஆலயடி ஆதிவைரவர் ஆலயம் (காவியம் ஆக்கப்பாடல்கள்)

12. 2004ம் ஆண்டு திமிலதீவு கிருஷ;ணர் ஆலயம் (காவடி, ஆக்கப்பாடல்)

13. 2005ம் ஆண்டு ஆரையம்பதி கண்ணகி அம்பாள் ஆலயம் (கூறைதாலிப் பாடல்)

14. 2006ம் ஆண்டு புன்னைச்சோலைக் காளி கோயில் (காவடி, தாலாட்டு, ஆக்கப்பாடல், பக்திப்பாடல்)

15. 2008ம் ஆண்டு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் (காவடிப்பாடல்)

16. 2010ம் ஆண்டு கல்லடி உப்போடை பேச்சியம்பாள் ஆலயம் (பக்திப்பாடல்கள்-13)

17. 2011ம் ஆண்டு நாவற்குடா ஸ்ரீ மாரியம்பாள்; ஆலயம் (கும்மி, காவடி, பக்திப்பாடல்கள்-14)

18. 2012ம் ஆண்டு ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் (காவடி, கும்மி, பக்திப்பாடல்கள்)

 

பதிப்பித்த நூல்கள்

1. 2001ம் ஆண்டு பேச்சியம்பாள் பாடல்கள்.

2. 2002ம் ஆண்டு புதுக்குடியிருப்பு கற்பரசி கண்ணகி அம்பாள் பாடல்கள்.

3. 2006ம் ஆண்டு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல்கள்.

4. 2010ம் ஆண்டு கல்லடி-உப்போடை-நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்பாள் பாடல்கள்.

5. 2010ம் ஆண்டு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் சிதானந்த தபோவனம் ஸ்தாபகர் ஓங்காரானந்த சரஸ்வதி சரிதம்.

6. 2012ம் ஆண்டு பேச்சியம்பாளின் அவதாரமும் ஆலயமும்.

7. இறையின்ப பாவாரம்