மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைக்குரியவர்கள் அல்லர் : சமூகத்தில் இருந்து ஓரங்கட்டக்கூடாது – சு.இராகுலநாயகி.

மாற்றுத்திளனாளிகள் எவரும் பிரச்சினைக்குரியவர்கள் அல்லர். இவர்களை சமூகத்தில் இருந்து ஓரங்கட்டக்கூடாதென போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சு.இராகுலநாயகி குறிப்பிட்டார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகமும், கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து இன்று(13) வெள்ளிக்கிழமை வெல்லாவெளி பிரதேச கலாசார மண்டபத்தில் நடாத்திய மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலாளர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
மாற்றுத்திளனாளிகள் எவரும் பிரச்சினைக்குரியவர்கள் அல்லர். அவர்களிடத்தில் சிறந்த திறமைகள் காணப்படுகின்றன. இவர்கள், சிறந்த பிரஜைகள், இவர்களை அனைவரும் ஒன்றிணைந்து வாழ வைக்க வேண்டும். சமூகத்தில் இருந்து ஓரம் கட்டகூடாது. எமது சேவையினை இவர்களுக்கு அர்பணிப்புடன் வழங்க வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்கள், இவர்களுக்கு வழங்குகின்ற சேவையினை பாராட்ட வேண்டும்.

இந்நிகழ்வில், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு பரிசுப்பொருட்களும் வழங்கி கௌரவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.