4 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

திருகோணமலையில்  4 வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

 

திருகோணமலை – துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியிலே குறித்த சம்வம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவனின் சடலம்  திருகோணமலை பொது ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.