பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்கி வைத்தார்.

இதன்போது சித்தாண்டி – 01, சித்தாண்டி – 02, சித்தாண்டி – 03, சித்தாண்டி – 04, மாவடிவேம்பு – 01, மாவடிவேம்பு – 02, வந்தாறுமூலை, ஒருமுலைச்சோலை, களுவன்கேணி ஆகிய கிராமங்களுக்கு சென்று வெள்ள பாதிப்புக்களை பார்வையிட்டார்.

மாவடிவேம்பு விக்னேஸ்வரா இடைத் தங்கல் முகாமில் உள்ள எழுபது குடும்பங்களுக்கு சிறுவர்களுக்கான பொருட்கள் மற்றும் பாய்கள் வழங்கி வைத்தார். அத்தோடு சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலய இடைத் தங்கல் முகாமில் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கும், சித்தாண்டி இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலய இடைத் தங்கல் முகாமில் உள்ள பதினான்கு குடும்பங்களுக்கும் பாய் வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய வழங்கப்பட்ட நிதி மூலம் உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் மற்றும் பேரவை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.