கல்வி சேவையை (Closed) மூடிய சேவையாக அமைத்தல்.

தொழில் சேவைப் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்தல், சேவைகளை பாராட்டுவதற்கான முறை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றுதல், தொழில் தன்மையை மேம்படுத்துதல், சேவை திருப்தியின் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த செயல்திறன் மிக்க சேவையை வழங்கக்கூடிய வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர் கல்வித் துறையைச் சார்ந்தோர் மற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான கல்வி மூடிய சேவை ஒன்றை ஸ்தாபிக்கும் முக்கியத்துவம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விடயங்களை மதிப்பீடு செய்து ஆலோசனை ஒன்றைத் தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் விடயத்துடன் தொடர்புபட்ட நீடித்த அனுபவம் மிக்க புத்திஜீவிகளுடனான குழு ஒன்றை நியமிப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.