விஷமிகளை கண்டறிய பொலிஸார் விசேட மோட்டார் வாகன ரோந்து நடவடிக்கை

தமிழ்மொழி மூல பெயர்ப் பலகைகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட  நல்லிணக்கம் மற்றும் சக வாழ்வை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் குறித்து பதிவாகும் ஒவ்வொரு சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் நேரடியாக சென்று விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்து.

 

அத்துடன் அவ்வாறான விஷமத் தனமான செயற்பாடுகளை தடுக்க, பொலிஸ் மோட்டார் வாகன ரோந்து, சைக்கிள் ரோந்து மற்றும் இரவு நேர விஷேட ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் வலையங்களின் அத்தியட்சர்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள, ஆங்கில மொழிகளுக்கு மேலதிகமாக தமிழில் இருந்த பெயர் பலகை ஒன்று பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் கழற்றி சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் ஊடாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், அந் நிலையங்களை வழி நடத்தும் உதவி பொலிஸ்  அத்தியட்சர்களுக்கும்  மேற்படி உத்தரவு பதில் பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.