அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்

நாடு பூராகவும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையதினம் (வெள்ளிக்கிழமை 15) மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ்வாறு மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.