கிழக்கு மாகாணம் மீண்டும் எழுச்சி பெறும் – பஸீல் தெரிவிப்பு

இப்பகுதி மக்களுக்கு நாங்கள் கடந்த காலத்தில் மின்சாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல விடையங்களை செய்து கொடுத்தவர்கள் என்ற ரீதியில் நாங்கள் இப்பகுதிக்கு வரும்போது சந்தோசப்படுகின்றோம். கடந்த நான்கரை வருடங்களில் அதீத வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லலாம் என மக்கள் எதிர்பாத்திருந்திருப்பீர்கள். இந்நிலையில் முன்பிருந்த அபிவிருத்திகள் அனைத்தும் தடைப்பட்டு குடிப்பதற்கு நீர், கமத்தொழில், பட்டதாரிகளுக்குரிய தொழில்வாய்ப்புக்களில்லாமல், அனைத்தும் தடைப்பட்டுள்மையினால் நாங்கள் மிகுந்த கவலையடைகின்றோம்.
என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசீல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டம் கேவில்போரதீவில் ஞாயிற்றுக்கிமை (10) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
எமது வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச, மற்றும் எமது கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்களை முன்னிறுத்தி நான் மிகவும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன். முன்னர் எங்கள் காலத்திலிருந்ததைப் போலவே மீண்டும் கிழக்கு மாகாணத்தை  துரித அபிவிருத்திக்கு இட்டுச் சென்று மக்களுக்காக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வோம். மிகவும கஸ்ட்டமாக எதுவித முன்னேற்றங்களும் இல்லாமல் இருந்த காலத்தில் எமது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கன்னிவெடிகளை அகற்றி அபிவிருத்தி வேலைகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது பட்டிருப்பில் எந்தவிதமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை. மக்களுக்குத் தேவையானவற்கை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் செய்து கொடுக்க முடியாதிருக்கின்றனர். எதிர்வருகின்ற 16 ஆம் திகதிக்கும் பின்னர் நாங்கள் இப்பிரதேசத்தை ஒரு ஒளி மயமான பிரதேசமாக மாற்றியமைப்போம் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்ககொள்கின்றேன்.
கிழக்கு மாகாணசபையை மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்காக உருவாக்கிய அவர்களை அதிலிருந்து அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி அதன் மூலமாக இப்பகுதி மக்களின் கமத்தொழில், உள்ளிட்ட வாழ்வாதாரங்களுக்கு வேண்டிய வசதிகளைசச் செய்து கொடுத்து, இப்பகுதி மக்களின் வாழ்வை மீண்டும் ஒருமுறை ஒளிமயமாக்க எங்களால் முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுடைய கையில் தங்க காசுகளும், ரெத்தினங்களும், இருந்தன. தற்போது என்ன நடந்துள்ளது. இந்த ஆபரணங்களை அணிந்திருந்தவர்கள், தற்போது அவைகளை அடகு வைத்துவிட்டு கடன்சுமையில இருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்பகுதி மக்கள் மிகுந்த கவலையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதுபோன்று பயிரினங்களும் விளைச்சல் இல்லாமல், அவற்றுக்கு தகுந்த விலையில்லாமலும் இருக்கின்றன. இந்நிலையில்தான் இப்பகுதி மக்களின் பிள்ளைகளும் படித்து விட்டு தொழில் இல்லாமல் இருக்கின்றார்கள்.
எனவே எமது வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதங்களை வழங்கி கஸ்ட்டநிலையிலிருந்து நீக்குவதற்கு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதுபோல் விவசாயத்துறையினையும் முன்னேற்றவுள்ளோம். விளைநிலங்கள் அனைத்திலும் பயிரிடக்கூடி நிலமையை எதிர்வரும் 16 ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்படுத்தப்படும். 16 திகதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதன் மூலமாக 17 ஆம் திகதி மக்களுக்குத் தேவையாதன அனைத்து சுபிட்சமான வாழ்வையும் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் செளுமையடையும்.
இக்கூட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் வி.முரளிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், மற்றும் பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.