மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் 

யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறுவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில்  கவனயீர்பு ஊர்வலமும் போராட்டத்திலும் நேற்று சனிக்கிழமை ஈடுபட்டனர்

 

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு திருமலை வீதியில் ஆரம்பித்து நகர் மணிக் கூட்டு கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

இதில் காணாமல் போன உறவுகள் யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்;. உண்மை, நீதி, இழப்பீடு , 6 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பணவு மீள இடம்பெறாமை போன்ற சுலோகங்கள் மற்றும் காணமல் போன உறவுகளின் புகைப்படத்துடன் இந்த ஆர்பாட்டத்தில் பகல் 12 மணிவரை ஈடுபட்டு அங்கிருந்து ஆர்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்