ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் நீண்டகாலக் கண்காணிப்பாளர் பீட்டர் நொவோட்டனி அவர்களே இவ்வாறான சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

மேற்படி சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள், தேர்தல் வன்முறைகள், ஊடகவியலாளர்கள் மீதான அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.